நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளின் 700 கிளைகளில், 8.5 லட்சம் போலி வங்கிக்கணக்குகள் தொடங்கி, சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தியதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது. அந்த கணக்குகள், முறையான கே.ஒய்.சி. விதிமுறைகளை பின்பற்றாமலும், போலி ஆவணங்களை பயன்படுத்தியும் தொடங்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு சில வங்கி அதிகாரிகள், இ-மித்ரா முகவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் அந்த சைபர் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதும் சி.பி.ஐ.க்கு தெரிய வந்தது. இந்த கணக்குகள் பெரும்பாலும் ஒருதடவை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. மோசடி […]
கோவில்பட்டி இந்திராநகர் சொர்ணா நர்சிங் கல்லூரியில் கல்வியே அழியாத செல்வம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை தாங்கினார்.எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி செயலாளர் கண்ணன், வேளாண்மை துறை முன்னாள் இணை இயக்குனர் சங்கர நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் சாந்தி பிரியா அனைவரையும் வரவேற்றார். தமிழக காவல்துறை முன்னாள் ஐஜி முத்துசாமி கலந்து கொண்டு கலை இலக்கிய போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது. கற்ற கல்வியை தொடர்ந்து அறிவை […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உதவி அர்ச்சகராகப் பணிபுரிபவர் கோமதிவிநாயகம் (வயது 30). இவரது வீட்டில், கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்கள் சிலர் தங்கியுள்ளனர். இவர்களில் சிலர் மது குடித்துவிட்டு வீட்டில் ஆபாசமாக நடனமாடியதாகக் கூறப்படுகிறது. இதை வீடியோ எடுத்த கோயில் முன்னாள் அர்ச்சகர் ஹரிஹரன் மகன் சபரிநாதன், அதை அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகக் குழுவினருக்கு அனுப்பிவைத்து, புகார் தெரிவித்தார். […]
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), வருகிற 2027-ம் ஆண்டில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரை இஸ்ரோ தேர்வு செய்துள்ளது.அவர்களுக்காக சிறப்பு பயிற்சியும் கொடுக்கப்பட்டுள்ளது. மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தின் முன்னோட்டமாக, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு இந்திய வீரரை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்தது. அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்த இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலைய ஆராய்ச்சி குழுவுடன் […]
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா குறுக்குச்சாலையை அடுத்த கொல்லம்பரும்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்து பாலகிருஷ்ணன். இவரது மனைவி வள்ளியம்மாள். இவர், கடந்த 1996 முதல் 2001 வரை கொல்லம்பரும்பு பஞ்சாயத்து தலைவியாக இருந்தவர்.. தற்போது அதிமுக கிளை செயலாளராக இருந்த முத்து பாலகிருஷ்ணன், இப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலிலும் செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு முத்து பாலகிருஷ்ணன் பைக்கில் குறுக்குச்சாலை சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சந்திரகிரி அருகே எதிரே வந்த டிப்பர் லாரி, […]
தமிழ் திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக இருப்பவர் பொன்னம்பலம். சண்டை கலைஞரான இவர் 1988-ல் ‘கலியுகம்’ என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்பட முன்னணி நடிகர்கள் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2-ல் போட்டியாளராக கலந்து கொண்டார். கடந்த 2020-ம் ஆண்டு சீறுநீரக பிரச்சினையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொன்னம்பலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் வீடு திரும்பினார். அப்போது, அவருக்கு தமிழ் திரைப்பிரபலங்கள் பண […]
கோவில்பட்டி: ரெயிலில் ஏறமுயன்ற போது தண்டவாளத்தில் தவறி விழுந்த வாலிபர்- நடைமேடையை உடைத்து
கோவில்பட்டி சாலை புதூர் இ.பி.காலனியை சேர்ந்தவர் வீரபிரசாத். இவர் திருவாரூரில் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவர் இன்று மனைவி பிருந்தாவுடன் திருவாரூர் புறப்பட்டார். இதற்காக அவர் நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலில் விருதுநகர் சென்று அங்கிருந்து திருவாரூர் செல்லும் ரெயிலில் பயணம் செய்ய திட்டமிட்டார். இதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு ரெயில் நிலையம் வந்தார். ரெயிலுக்காக இரண்டாவது பிளாட்பாரத்தில் காத்திருந்தார்..காலை 6.04 மணிக்கு வந்துவிட்டு 6.06 மணிக்கு […]
கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள ஆக்கி சிறப்பு விளையாட்டு விடுதி கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது இங்கு 30 கல்லூரி மாணவர்கள் தங்கி பயிற்சி பெற்று வருகிறார்கள் இந்த விடுதி மேலாளராக மாவட்ட விளையாட்டு அதிகாரி ரத்தினராஜ் மற்றும் தலைமை பயிற்சியாளராக முத்துக்குமார் செயல்பட்டு வருகிறார்கள். இங்கு தங்கி பயிற்சி பெற்று வரும் ஆக்கி வீரர்கள், சர்வதேச வீரர்களாகவும் விளையாட்டின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசு பணியில் 20க்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் இந்த […]
குமரி மாவட்டம் வழியாக ஏராளமான லாரிகளில் கனிமவளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. மார்த்தாண்டம் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் மார்த்தாண்டம் வழியாக உரிய அனுமதி சீட்டு இல்லாமலும், அதிக பாரத்துடனும் கனிமவளம் ஏற்றிக்கொண்டு கேரளா செல்லும் லாரி டிரைவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அனுமதிப்பதாக புகார்கள் எழுந்தன. அதிலும் கையில் பணம் இல்லை என்று கூறும் டிரைவர்களிடம், ‘ஜிபே’ மூலம் பணம் அனுப்பும்படி அடாவடி வசூலிலும் இறங்கியதாக கூறப்படுகிறது. இந்த புகார் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் […]
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்தவகையில். போதைப்பொருளுக்கு அடிமையான நடிகர் – நடிகைகளை போலீசார் தற்போது கண்காணிக்க தொடங்கியுள்ளனர். நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட பிறகு இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் சொன்ன தகவல் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். நடிகர் கிருஷ்ணா, கேரளாவில் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்று மாலை நடிகர் கிருஷ்ணா திடீரென்று […]







