• June 6, 2025

Month: September 2024

செய்திகள்

அமெரிக்காவில் டிரைவர் இல்லாத தானியங்கி காரில் மு.க.ஸ்டாலின் பயணம்

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.அமெரிக்க சுற்றுப்பயணத்தில் ஜாகுவார் நிறுவனத்தின் டிரைவர் இல்லாத தானியங்கி காரில் பயணம் செய்தார். இது பற்றி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், தந்தை பெரியாரின் ‘இனிவரும் உலகம்’ புத்தகத்தில் உள்ள கருத்தோடு தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், “இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி […]

செய்திகள்

சென்னையில் நடந்த அகில இந்திய பரதநாட்டிய போட்டி

பாரம்பரிய கலை மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் ஜகதாலயா அமைப்பு சார்பில்  சென்னையில் `பலோத்சவ் 2024’ நடத்தப்பட்டது.  7முதல் 10 வயதுள்ள குழந்தைகளுக்கான குரல் மற்றும் பரதநாட்டிய போட்டி நடத்தப்பட்டது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இயல் இசை நாடக மன்றத்தில் நடந்த போட்டியில் . 170க்கும் மேற்பட்டவர்கள் தனி குரல், தனி நடனம் மற்றும் குழு நடனம் ஆகியவற்றில் பங்கேற்றனர். ஜகதோ உத்சவ் 2024 (11 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள பங்கேற்பாளர்களுக்கான அகில இந்திய […]

செய்திகள்

தாம்பரம்-கொச்சுவேலி இடையே வாரம் இருமுறை சிறப்பு ரயில்

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-  “தாம்பரத்தில் இருந்து வருகிற 6-, 8-, 13-, 15-, 20-, 22-ம் தேதி ஆகிய நாட்களில் (வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06035) திருச்சிக்கு நள்ளிரவு 12.20 மணிக்கு வந்து 12.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 11 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும். அதுபோல் மறுமார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து வருகிற 7, 9, 14-, 16, 21, 23 ம்தேதி ஆகிய […]

சினிமா

பெண்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு அவசியம்-நடிகை நிவேதா தாமஸ்

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானபின், மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். அதற்கு ஏற்ப குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. கேரளா மட்டுமல்லாமல் மற்ற திரையுலகிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சில நடிகைகள் அடுக்கடுக்கான புகார்களை அள்ளி வீசி வருகின்றனர். இந்தநிலையில், மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக நடிகை நிவேதா […]

சினிமா

கேரள பாலியல் விவகாரம்: தண்டனையைஉறுதிப்படுத்தினால்தான் அதை செய்பவர்கள் பயப்படுவார்கள்; இயக்குனர் வெங்கட்பிரபு

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானபின், மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். அதற்கு ஏற்ப குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. கேரளா மட்டுமல்லாமல் மற்ற திரையுலகிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சில நடிகைகள் அடுக்கடுக்கான புகார்களை அள்ளி வீசி வருகின்றனர். இந்தநிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேசியிருக்கிறார். இது […]

கோவில்பட்டி

அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் இன்சூரன்ஸ் தொகை: கோவில்பட்டி கோட்டாட்சியரிடம், தலையில் முக்காடு போட்டு

கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வக்கீல் அய்யலுசாமி தலைமையில், கயத்தாறு ஒன்றிய தலைவர் செல்லத்துரை,வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ராஜா, பஞ்சாயத்து தலைவர் உடையார் பாண்டியன் உள்ளிட்டோர் தலையில் முக்காடு போட்டபடி வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த புயல் மழையின் காரணமாக உளுந்து பாசி மக்காச்சோளம் பருத்தி மிளகாய் செடி வாழை நெல் உள்ளி உள்ளிட்ட அனைத்து பயிர்களும் முழுமையாக […]

செய்திகள்

ரூ.50.65 கோடி போதைபொருள் கடத்தல்:தூத்துக்குடி பிரமுகர் உள்பட 6 பேர் கைது

செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வாகன சோதனையின் போது ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர், காரின் பின்பக்க இருக்கையை அகற்றி பார்த்தபோது  ரகசிய பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில்  10 பொட்டலங்களில் `மெத்த பெட்டமின்’ என்ற போதைப் பொருள் இருந்தது, இதன் மொத்த எடை 10.13 கிலோ இதன் மதிப்பு ரூ.50.65 கோடி. இதையடுத்து காரில் இருந்த  3பேரை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைதுசெய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை […]

செய்திகள்

விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23-ந்தேதி திட்டமிட்டபடி தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறும்; புஸ்சி ஆனந்த்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற  அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு,  அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். வரும் 23-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருப்பதாகவும் அதற்காக பாதுகாப்பு மற்றும் அனுமதியை அக்கட்சி  கோரியுள்ளது. இதற்கிடையில், விஜய்யின் த.வெ.க மாநாடு தேதி மாற்றம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஜோதிடரை அணுகியுள்ளதாகவும், மாநாட்டிற்கான தேதி இந்த மாதத்திற்குள் கிடைக்கவில்லை என்றால் ஜனவரி மாதத்திற்கு மேல் மாநாடு […]

சினிமா

பார்முலா 4 கார் பந்தயம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு  பாஜக நிர்வாகி  பாராட்டு

சென்னை தீவுத்திடலில் பார்முலா 4 கார் பந்தயம் 2 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் பார்முலா 4 கார் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, பாஜக நிர்வாகியும், பைக் ரேஸருமான அலிஷா அப்துல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- சென்னையில் இப்போது பார்முலா 4 கார் பந்தயம் முக்கியமா என நிறைய பேர் கேட்கின்றனர். ஒரு வீராங்கனையாக பார்த்தால் இது முக்கியம்தான். தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் […]