• June 8, 2025

Month: September 2024

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வசிப்பவர்கள் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வது எப்படி?

தூத்துக்குடி- திருநெல்வேலி பாசஞ்சர் ரெயிலில் ஏறி, மணியாச்சி சந்திப்பில் இறங்கினால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்தவர்கள் மாறிக் கொள்ளலாம் என்ற தகவலை  பயணிகள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலசங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: “வண்டி எண். 06667 தூத்துக்குடியில் இருந்து மாலை 6:25 மணிக்கு இரவு 8:25 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு சென்றடையும். தூத்துக்குடி திருநெல்வேலி பயணிகள் ரெயில் கட்டணம் ரூ. 20 தூத்துக்குடியில் இருந்து மாலை 6:25 மணிக்கு புறப்படும் […]

சினிமா

சுந்தர் சி – வடிவேலு நடிக்கும்  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

சுந்தர்.சி இயக்கத்தில் காமெடியனாக நடிகர் வடிவேலு நடித்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவை. இப்போது காமெடி சேனல்களில் இந்தக் கூட்டணியின் காமெடி பிராதன இடத்தை தினமும் பிடிக்கும். 15 ஆண்டுகளாக இந்தக் கூட்டணி இணைந்து எந்த படமும் நடிக்கவில்லை. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பின்னர் சுந்தர் சி இயக்கி நடிக்கும் திரைப்படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் வடிவேலு பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் […]

செய்திகள்

திருச்செந்தூர் அருகே பிச்சிவிளை கிராமத்தில் வெள்ளையன் உடல் நாளை  அடக்கம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று  மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.மரணம் அடைந்த வெள்ளையனின் உடல் பெரம்பூரில் உள்ள வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வியாபாரிகள் திரண்டு சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, மாதவரம் […]

செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் போர்டு கார் உற்பத்தி: மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான போர்டு 1999ம் ஆண்டு தனது முதல் ஆலையை இந்தியாவில் நிறுவியது. குஜராத் மற்றும் சென்னை என இந்தியாவில் இரண்டு இடங்களில் ஆலைகளை நிறுவியது. 2019ம் ஆண்டு வரை இந்தியாவில் கொடிகட்டி பறந்து வந்த விற்பனை, கொரோனா பெருந்தோற்றிற்கு பிறகு சரிய ஆரம்பித்தது. அதன்படி, கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் மாநிலம் சனாட் பகுதியில் செயல்பட்டு வந்த ஆலையை அந்நிறுவனம் மூடியது. அப்பொழுது கடைசி காராக ஃபோர்டு […]

செய்திகள்

திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்; திருமாவளவன் பேட்டி

விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-பீகார், குஜராத் மாநிலங்களில் மதுவிலக்கு இருக்கும்போது தமிழ்நாட்டில் ஏன் இருக்கக்கூடாது?. அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்கில் உடன்பாட்டுடன் இருக்கும் நிலையில் கடைகளை மூடுவதில் என்ன சிக்கல் இருக்கிறது?. மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் பிற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக இருக்க வேண்டும். மது ஒழிப்பு மாநாட்டை கூட்டணிக் கணக்குடன் இணைத்துப் பார்க்க வேண்டாம். மது ஒழிப்பு மாநாட்டில் லட்சக்கணக்கான மகளிரை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளோம். விடுதலை சிறுத்தைகள்  கட்சி மாநாட்டில் கட்சிகள் […]

செய்திகள்

அரசு விழாவில் கே.பி.முனுசாமியை பங்கேற்க விடாமல் தடுத்த திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டம் ராமன்தொட்டி பகுதியில் மத்திய அரசின் பி.எம்.ஜி.எஸ்.ஒய் (PMGSY) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக துணைப் பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமியை திமுகவைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க விடாமல் அராஜகம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அரசின் திட்டங்களுக்கான துவக்க விழாவில் கலந்துகொள்வது மரபு. ஆனால், அரசியல் […]

கோவில்பட்டி

67வது நினைவு தினம்: இம்மானுவேல் சேகரனார் உருவப்படத்துக்கு மரியாதை

சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில், அவரது படத்திற்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும்,நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் இம்மானுவேல் சேகரனார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். , விளாத்திகுளம் பாரதியார் பேருந்து […]

சினிமா

`என் ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி விவாகரத்து முடிவை அறிவித்திருக்கிறார்’ – ஆர்த்தி

நடிகர் ஜெயம் ரவி திங்கட்கிழமை அன்று  அறிக்கை ஒன்றை வெளியிட்டு மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இந்நிலையில், என் ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி விவாகரத்து முடிவை அறிவித்திருக்கிறார் என ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-, சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க […]

சினிமா

பொங்கலுக்கு வெளியாகிறது ‘விடாமுயற்சி’

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ‘விடாமுயற்சி’ வெளியாகிறது.இப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகி வருகின்றன. , விடாமுயற்சி படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது . இந்த […]