தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல் துறையை சேர்ந்த 17 பேர், வருவாய் துறையை சேர்ந்த 3 பேர் என 21 பேருக்கு எதிராக நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ல் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து […]
தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள வ.உ.சி. கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளுடன் இணைந்து நடத்திய கல்விக்கடன் வழங்கும் முகாமில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி , சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆகியோர் முன்னிலையில் 94 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4.89 கோடி கல்விக்கடன் ஆணைகளை இன்று வழங்கினார். இம்முகாமில் அவர் பேசியதாவது:- உங்களது கனவுகளுக்கும், பொருளாதார வசதிக்கும் இடையே இருக்கக்கூடிய இடைவெளியானது உங்களது கனவுகளை நிறுத்திவிடக்கூடாது என்பதற்காகத்தான் […]
விளாத்திகுளத்தில் நடந்த 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியின் பதிவாளர் நடுக்காட்டுராஜா ,துணைப் பதிவாளர் சுப்புராஜ், கூட்டுறவு சார்பதிவாளர் மகேஸ்வரன், செயலாளர் நாகமணி, சூரங்குடி கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன், திரைப்பட நடிகர் கந்தசாமி, விளாத்திகுளம் திமுக பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, கிழக்கு ஒன்றிய செயலாளர் […]
கோவில்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஒருவித காய்ச்சல் பரவி வருகிறது. கடும் இருமல் சளி அறிகுறி இருந்தால் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறவும். வீட்டிலிருந்து சரியாகும் என்று விட்டுவிட்டால் அது குறைந்த அழுத்தம் (Low Persure) நிலைக்கு கொண்டு வந்து வாந்தி ஏற்பட வைக்கிறது. எனவே மருத்துவரிடம் உரிய விரைவான ஆலோசனை பெற்றுக் கொள்ளவும். மேலும் மாஸ்க் அணிந்து வெளியே வரவும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா இவ்வாண்டு 13.11.2023 தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை 18.11.2023 மாலை சுமார் 4 மணியளவில் நடைபெறும். 19.11.2023 இரவு திருக்கல்யாணம் நடைபெற்று திருவிழா நிறைவு பெறும். இத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் திருவிழாவின் முக்கிய நாட்களான இன்று (வெள்ளிக்கிழமை) 17.11.2023 மற்றும் […]
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு பேரவைக்கூட்டம் கோவில்பட்டி ஜீவா இல்லத்தில் நடைபெற்றது, கூட்டத்திற்கு சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலச்செயலாளர் பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன், மாவட்ட துணைச்செயலாளர் பாபு,மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ், நகரச்செயலாளர் சரோஜா ஆகியோர் உரையாற்றினார்கள். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நகரச் செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், தாலுகா செயலாளர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு […]
வண்டி எண் 06001 சென்னை எழும்பூர் – நெல்லை சிறப்பு ரெயில் எழும்பூரில் 17.11.23 இன்று வெள்ளிக்கிழமை இரவு 11.55 க்கு புறப்பட்டு சனிக்கிழமை மதியம் நாளை மதியம் 12.45 க்கு நெல்லையை சென்றடையும். வண்டி எண் 06002 திருச்செந்தூர் – தாம்பரம் சிறப்பு ரெயில் திருச்செந்தூரில் 18.11.23 நாளை சனிக்கிழமை இரவு 10.10 -க்கு புறப்பட்டு நெல்லைக்கு 11.45 க்கு வந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.45 தாம்பரத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மினுக்கம்பட்டி கிராம பகுதியில் கருப்பண்ணசாமி, பாப்பாத்திஅம்மாள், அங்காளபரமேஸ்வரி கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் கோவிலை இடிக்க சென்ற வருவாய்த்துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். சம்பவ இடத்தில் ஏ.டி.எஸ்.பி..சந்திரன், டி.எஸ்.பி..துர்காதேவி ஆகியோர் தலைமையிலான 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஜே.சி.பி. இயந்திரங்களைதடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளதால் போலீசார் தடுப்புகள் வைத்துள்ளனர். தற்போது அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது
திருச்செந்தூர் கோவிலில் தரிசன கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி பக்தர்கள் போராட்டம்; 200க்கும்
திருசெந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கந்த சஷ்டி நாட்களில் தரிசன கட்டணம் பல மடங்கு அதிகரித்து உள்ளது. ரூ.100 சிறப்பு தரிசன கட்டணம் ரூ.1௦௦௦ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ.500 லிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த கட்டணம் உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. எனினும் விரைவான தரிசனத்துக்காக ரூ.1௦௦௦ செலுத்தி சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். […]
மறைந்த தியாகி சங்கரய்யாவுக்கு, சூர்யா சேவியர் என்பவர் சமர்தர்மத்தின் சங்கநாதம் சங்கரய்யா என்று புகழாரம் சூட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:- *தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா ஆத்தூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் தோழர். பிரதாப சந்திரன் என்ற சங்கரய்யாவின் மூதாதையர்கள். *சங்கரய்யாவின் முன்னோர்கள் பரம்பரையாக கிராம அதிகாரிகளாக இருந்தவர்கள். சங்கரய்யா தந்தை நரசிம்மலு கிராம அதிகாரியாக வேலை செய்ய விருப்பமில்லாமல் பொறியாளர் பட்டம் பெற்றார். *கோவில்பட்டியில் ஜப்பான் கம்பெனியில் மெக்கானிக்கல் என்ஜினியராக வேலை […]







