மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்பப்டும் கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு அருகே உள்ளது. தரை மட்டத்தில் இருந்து சுமார் 7 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள கொடைக்கானல் மலைவாசஸ்தலத்துக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம், டிசம்பர் மாதத்து குளிர் சீசனை அனுபவிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருக்கும், ஆனால் இந்த ஆண்டு அவர்கள் வருகையும் குறைவாகவே இருக்கிறது, டிசம்பர் முடிந்து ஜனவரி மாதத்தில் தற்போதும் கொடைக்கானலில் குளிர் சீசன் […]
மதுரை அருகே உள்ள யானை மலை ஒத்தக்கடை என்ற இடத்தில் உள்ளது யோக நரசிம்மர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். மதுரை அருகே உள்ள யானை மலை ஒத்தக்கடை என்ற இடத்தில் உள்ளது யோக நரசிம்மர் ஆலயம். மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் மூலவராக யோக நரசிம்மர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தயார் பெயர் நரசிங்கவல்லி என்பதாகும். ஆலய தீர்த்தம் சக்கர தீர்த்தமாகும். இது ஒரு குடவறைக் கோவிலாகும். நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களிலேயே, மிகப்பெரிய […]
தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை ஜனவரி 13 ஆம் நாளில் கொண்டாடப்படும். ஆனால் சில ஆண்டுகளில் ஜனவரி 14 ஆம் நாளிலும் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் இறுதி நாளையே போகிப் பண்டிகையாக தமிழ் நாட்காட்டியில் குறிப்பிடுகிறார்கள். பரவலாக போகிப் பண்டிகை தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை […]
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் தூத்துக்குடி வித்ய பிரகாசம் சிறப்புப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், இன்று பார்வையிட்டார். அவருடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் மற்றும் செய்தியாளர்கள் சென்றனர், சிறப்பு பள்ளியில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறை, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பயிற்சிகள் ஆகியவற்றை பார்வையிட்டார். குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வரும் பள்ளி வாகனத்தில் மாவட்ட ஆட்சியர் , மாநகராட்சி மேயர் மற்றும் செய்தியாளர்கள் ஆகியோர் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் பயணித்தனர். மேலும், […]
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக, சட்டசபையில் பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவோர் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார், இந்த நிலையில், புதுக்கோட்டை இறையூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்தது குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் டுவிட் செய்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:- வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த ‘துணிவு’, நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் நேற்று வெளியானது. ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர். அஜித், விஜய் படங்களுக்கு எப்போதுமே முதல் நாள் வசூல் என்பது மிகவும் முக்கியமானது. அந்த வகையில் வாரிசு திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.26.5 கோடி வசூலித்துள்ளது முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு போட்டியாக ரிலீஸ் ஆன அஜித்தின் துணிவு படம் […]
நாட்டில் பறவை காய்ச்சல் பரவல் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இதனால், கோழி, வாத்து போன்ற வளர்ப்பு பறவையினங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் கோழி பண்ணையில் உள்ள 1,800 கோழி குஞ்சுகள் திடீரென உயிரிழந்து உள்ளன. இதனை தொடர்ந்து, கேரள விலங்குகள் நல துறை மந்திரி சின்சு ராணி, உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டு உள்ளார். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படியும் அறிவுறுத்தி உள்ளார். இதை […]
பழனி மலையில் உள்ள முருகன் கோவில் குடமுழுக்கு வருகிற 27-ம் தேதி நடைபெருகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சுடன் நடந்து வருகின்றன. இந்த நிலையில் குடமுழுக்கு விழா குறித்த, அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. குடமுழுக்கு விழா காலை 8 முதல் 9.30 மணி வரை நடைபெறும் எனவும், பக்தர்கள் காலை 4 முதல் 8 மணிக்குள் மலைக் கோவிலுக்கு சென்றுவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ரோப் கார் மற்றும் விஞ்ச் வழியாக 2 ஆயிரம் […]
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், நாகல்கேணி ஆதம் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சின்ன பொன்னன்(வயது 80). இவர், ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த மாதம் இவரது வீட்டின் எதிரே மேய்ந்து கொண்டிருந்த 5 ஆடுகளை காரில் வந்த மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான புதுச்சேரி மாநில பதிவு எண் கொண்ட அந்த […]
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் உலக கோப்பை ஆக்கி போட்டி நடைபெற இரு கிறது. இந்த போட்டி பற்றிய விழிப்புணவு நிகழ்ச்சி கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய ஆக்கி அணியின் தேர்வு குழு உறுப்பினருமான முகமது ரியாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆக்கி விளையாட்டின் மகத்துவம் பற்றி எடுத்து கூறினார். பள்ளி தாளாளர் நாகமுத்து தலைமை தாங்கினார். இயக்குனர் விஜயராணி முன்னிலை […]







