கொடைக்கானல் பகுதியில் கடும் குளிர்-உறைபனி; மக்கள் அவதி

 கொடைக்கானல் பகுதியில் கடும் குளிர்-உறைபனி; மக்கள் அவதி
மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்பப்டும் கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு அருகே உள்ளது. தரை மட்டத்தில் இருந்து சுமார் 7 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள கொடைக்கானல் மலைவாசஸ்தலத்துக்கு  தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம், டிசம்பர் மாதத்து குளிர் சீசனை அனுபவிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருக்கும், ஆனால் இந்த ஆண்டு அவர்கள் வருகையும் குறைவாகவே இருக்கிறது,  டிசம்பர் முடிந்து ஜனவரி மாதத்தில் தற்போதும்  கொடைக்கானலில் குளிர் சீசன் நிலவுகிறது. இந்த சீசன் மார்ச் மாதம் வரை இருக்கும்.. பகலில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது,  வெயிலையே பார்க்க முடிவதில்லை. இதன் காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி செல்கின்றன,

கொடைக்கானல் மலைப்பகுதியில்  நாளுக்கு நாள் உறைபனி தாக்கமும் அதிகரித்து வருகிறது. புல்வெளிகளில் உறை பனி படர்ந்து காணப்படுகிறது. கொடைக்கானல்  மட்டுமின்றி அருகாமையில் உள்ள தாண்டிக்குடி, பண்ணைக்காடு பகுதிகளிலும் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. அதே சமயம் அந்த பகுதிகளில் உறை பனி தாக்கம் சற்று குறைவாக இருக்கிறது,. இருப்பினும் குளிர் அதிகமாகவே இருக்கிறது,.

கொடைக்கானலில் வெப்பநிலை 6 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருக்கிறது., இதனால் உள்ளூர் வாசிகள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வருகிறார்கள். மற்றபடி வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடைக்கிறார்கள். அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக சுற்றுலா பயணிகளின் வருகை  சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஓரளவு இருக்கிறது. மற்ற நாட்களில் சுற்றுலா பகுதிகளில் ஆள் நடமாட்டமே இருப்பது இல்லை. இதன் காரணமாக இங்குள்ள வியாபாரிகளும் வர்த்தகம் நடக்காமல் சிரமப்படுகிறார்கள்.

 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *