தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் ஆத்தூர் கஸ்பா, மேலாத்தூர், சுகந்தலை, சேதுக்குவாய்த்தான், வடியவேல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 3 லட்சம் வாழைகள் மழை வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு விவசாயிகல் கவலையடைந்துள்ளனர். மழை வெள்ளத்தின் போது அடைக்கப்பட்ட போப்பாஞ்சான் வரப்பாஞ்சான் வடிகால் திறக்கப்பட்டுள்ள நிலையில் மழை வெள்ளம் வடிந்து வருகிறது. இதனிடையே, வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து […]
தூத்துக்குடி 1-ம் கேட் முகமதுசாதலிபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். மனைவி செல்லம்மாள் (82). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த வடபாகம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் செல்லம்மாள் முகத்தை தலையணையால் அழுத்தி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லம்மாளின் உறவினர் பொன்ராஜ் (42) என்பவரை போலீசார் […]
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மறு அறிவிப்புவரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதன் காரணமாக தூத்துக்குடியில் 272 விசைப்படகுகளும், தருவைகுளம் 200, வேம்பார் 50 விசைபடகுகளும், மாவட்டம் முழுவதும் சுமார் 2ஆயிரம் நாட்டுப் படகுகளும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் தற்போது வானிலை சீரடைந்து உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக மழை வெள்ளத்தால் சாலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. *தூத்துக்குடி மகிலாபுரம் – கீழசெக்காரக்குடிக்கு செல்லும் சாலை மற்றும் சொக்கலிங்கபுரம் -கீழசெக்காரக்குடிக்கு செல்லும் சாலையில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்கு மாற்றாக பொட்டலூரணி வழியாக கீழச்சக்காரக்குடிக்கு செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. * தூத்துக்குடி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முறப்பநாடு ஆத்துப்பாலம் வழியாக அகரம் கிராம பகுதிக்கு செல்லும் சாலையில் பாதிப்பு […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு அதிகப்படியான மழை நீர் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் அணைக்கட்டிற்கு சுமார் 60 ஆயிரம் கன அடி நீர் இன்று (13.12.2024) வந்து கொண்டிருகிறது. மேலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் […]
கோவில்பட்டி சிறுவன் கருப்பசாமி மர்ம சாவு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி காந்திநகர் முத்துராமலிங்க தெருவைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் கார்த்திக் முருகன் (35) என்பவர் தனது 10 வயது மகன் கருப்பசாமி (10) என்பவரை காணவில்லை என்று புகார் அளித்தார். இதன் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகன்நாதன் மேற்பார்வையில் கோவில்பட்டி […]
வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலாட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் செய்தியாளர்களை […]
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த […]
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடை வாடகை மீதான 18 சதவித ஜி.எஸ்.டி.,யை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வு மற்றும் வணிக உரிமைக் கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு ஆகியவற்றை திரும்ப பெறவேண்டும். குப்பை வரியை மாநிலம் முழுவதும் சீராக்க வேண்டும் என்பன உள்பட வரி சுமையை குறைக்க தமிழக அரசை வலியறுத்தி […]
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி எஸ்.எஸ். கோவில் தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி வஜிலா (வயது 40) என்பவர் தலைமையில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறி இருபதாவது:- எங்கள் தெருவில் சுமார் 600 மேற்பட்ட குடும்பங்கள் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் நான் மற்றும் எங்கள் பகுதியை சார்ந்த மலர்விழி ராஜேஸ்வரி என்பவரும் சேர்ந்து மகளிர் சுயகுழு ஒன்று ஆரம்பித்து கடன் கொடுத்து பணத்தை திருப்பி வாங்கி […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020
![](https://tn96news.com/wp-content/uploads/2025/01/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/bf9ec756-76e5-4497-b235-413f0178c160-1024x768.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-1-1024x819.png)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/02/97c00838-0364-48d9-8ede-e5cc78905eba-1024x443.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/03/Tn-96-2-6-1024x819.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-2-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-2-1024x819.png)