தூத்துக்குடியில் இன்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த ஆட்சியில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள்,. எந்த இடத்திற்கு போகக்கூடாதோ அந்த இடத்திற்கே தொடர்ந்து சென்று, அங்கிருக்கக்கூடிய… மக்களுக்கு சிக்கல்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக பள்ளிக்கூடங்களுக்கு சென்று .. அங்கே இருக்கக்கூடிய குழந்தைகளின் மனநிலையை பாதிக்கக்கூடிய அளவிற்கும், அவர்களுக்கு மன உளைச்சலை தரக்கூடிய அளவிற்கும் நடந்து… கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி முதல்-அமைச்சரும் […]
தூத்துக்குடி துறைமுக சாலையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட 2 மின் உற்பத்தி அலகுகள் இயங்கி வருகின்றன. மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, சேமிப்புக் கிடங்குகளில் குவித்து வைக்கப்படுகிறது. இந்த நிலையில், நிலக்கரி குவியலில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. அப்போது வீசிய பலத்த காற்றின் காரணமாகத் தீ மளமளவெனப் பரவியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் […]
தூத்துக்குடி மாவட்டம், புதூர் அடுத்துள்ள காடல்குடி காவல் எல்லைக்குட்பட்ட வடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி கலாவதி (வயது 62). இந்த தம்பதியருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் 3 பேருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால், கண்ணனும், கலாவதியும் மட்டும் வடமலாபுரத்தில் உள்ள தங்களது வீட்டில் வசித்து வந்தனர் நேற்று இரவு கலாவதி வீட்டின் உள்ளேயும், அவரது கணவர் கண்ணன் வீட்டின் வாசலிலும் படுத்து உறங்கினர். இன்று காலை 6 மணி […]
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தால் ரூ.50 கோடி தருவதாக பேரம் பேசியதாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: – “எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தால் சுமார் ரூ.50 கோடி தருவதாகக் கூறினர். மேலும், திமுகவுக்கு வந்தால் அமைச்சர் பதவி தருவதாகவும் பேரம் பேசினர். திமுக முக்கிய நிர்வாகி அனிதா ராதாகிருஷ்ணன் ஆட்கள் […]
தூத்துக்குடியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:- சிலர் நான் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு மந்திரியாக ஆசைப்படுவதாக எழுதுகின்றனர். எனக்குக் கேபினட் அமைச்சர் பதவி தருவதாகச் சொன்னபோதே வேண்டாம் என்று மறுத்துவிட்டு வந்தவன் நான். எந்த சுயநலத்திற்கும் நான் ஆசைப்பட்டதில்லை. என் கரங்கள் கரைபடியாதவை என்பதை இயற்கையே சொல்லும். என் மீது பழிதூற்றலாம், கோடி கோடியாகச் சேர்த்துவிட்டதாக நாக்கு கூசாமல் சொல்லலாம்; ஆனால், சாகும் வரை என் வாழ்வில் நேர்மையைக் காப்பேன். கடுமையான […]
தூத்துக்குடி மாவட்ட புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த நவீன் பாண்டியன் சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், புதிய அலுவலராக நியமிக்கப்பட்ட பெ.சா. கருப்பணராஜவேல் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் பெ.சா. கருப்பணராஜவேல் கோப்புகளில் கையெழுத்திட்டுத் தனது புதிய பொறுப்பினை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தின் அரசு நலத்திட்ட உதவிகள், மாவட்ட நிர்வாகத்தின் […]
கடந்த 2019-ஆம் ஆண்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிள்புரம் பகுதியில், முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த மோகன் (32) என்பவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில், போல்டன்புரம் பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி முருகன் மகன் செலிஸ்டின் குமார் (38), அவரது சகோதரர் மனோ என்ற மனோகுமார் (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் […]
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் சிக்கினர். தூத்துக்குடி போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (27), பிரவீன் (25), ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த தனராஜ் (30), நேதாஜி நகரை சேர்ந்த ஆனந்த் (28), சாத்தூர் பகுதியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (28) மற்றும் சையத் அப்ரலி (26) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். சோதனையின்போது 6½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. மேலும் இக்கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த மாணவ, […]
சென்னை பெரம்பூர் கிருஷ்ணதாஸ் ரோட்டை சேர்ந்தவர் கனகராஜ் (73). இவர் தூத்துக்குடி மில்லர்புரம் பெந்தகோஸ்தே சபையின் தலைமை மதபோதகராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு, சபையின் ஊழியரான குமரி மாவட்டம் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த டைட்டஸ் (41) என்பவர் சக பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்டதை கனகராஜ் கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட விரோதம் காரணமாக, டைட்டஸ் மற்றும் உதவி போதகர் ஜான் தாமஸ் (57) ஆகியோர் கனகராஜைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். இதன்படி, கடந்த 4.10.2016 […]
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







