தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பதில் ‘கிங் மேக்கர்’ என்று அழைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. என்று பல கட்சிகளின் தேர்தல் வெற்றிகளுக்கு வியூகம் வகுத்து கொடுத்திருக்கிறார். இவரது வியூகத்தின் மூலம் பெரும்பாலான கட்சிகள் தேர்தலில் வெற்றிக்கனியை பறித்துள்ளன. 2012-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று முதல்-மந்திரியாக வியூகம் அமைத்து கொடுத்தவர் இவரே. ஏன், தமிழ்நாட்டில் 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி […]
சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் தாம்பரம் மற்றும் சேலையூர் பகுதி சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரேவதி என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்பு சார்பதிவாளராக பதவி வகித்து வருகிறார். இவரும், இவருக்கு கீழே பணிபுரியும் மற்றொரு பெண்ணும் சேர்ந்து தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு வரும் நபர்களிடம் அதிக அளவில் லஞ்சப்பணம் வாங்கி வருவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. பத்திர பதிவுத்துறை உயர் அதிகாரிகள், […]
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று கோவை மாவட்டம் நீலம்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சமீபத்தில் டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;- “தமிழகத்தின் பொருளாதார ஆற்றல் காரணமாக, மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம். பொருளாதாரத்தில் மற்ற மாநிலங்களை விட நாம் முன்னிலையில் இருக்கிறோம். சென்னை, கோவை உள்ளிட்ட பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பயங்கரவாதிகளை ஈர்க்கும் இலக்குகளாக இருக்கும். இந்த […]
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு தாள் -1 தேர்வும் பி.எட். முடித்த பட்டதாரிகளுக்கு தாள்-2. தேர்வும் நடத்த அறிவிக்கப்பட்டது. தொடக்கப்பள்ளி, நடு நிலைப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளிகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. நவம்பர் 1 மற்றும் 2-ந்தேதி நடை பெறுவதாக இத்தேர்வு அறிவிக்கப்பட்டது. கல்லறை திருநாள் என்பதால் இதனை வருகிற 15 மற்றும் 16-ந்தேதி நடத்தப்படும் […]
மேகதாது அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய நீர் ஆணையத்திடம் வழங்கும் போது, தமிழ்நாடு அரசு, காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றிடம் கருத்து கேட்ட பிறகே முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-தமிழ்நாட்டின் ஜீவநதி காவிரி. காவிரி நதி நீரை நம்பித்தான் டெல்டா மாவட்ட […]
டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த 10-ந் தேதி இரவு, வெடிபொருளை மறைத்து எடுத்துச்சென்ற கார் வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலத்தில் 3 ஆயிரம் கிலோ அமோனியம் நைட்ரேட் மற்றும் பல ஆயுதங்கள், பொருட்கள் கைப்பற்றப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த வெடிப்பு நிகழ்த்தப்பட்டு உள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக முதலில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பயங்கரவாதத்தோடு தொடர்புடைய […]
எஸ்ஐஆர் படிவம் நிரப்புவது எப்படி? தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:- தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்யும் முறை.. 1) வலது பக்க மேல் மூலையில் புதிய புகைப்படம் ஒட்ட வேண்டும் 2) வாக்காளரின் விபரம், பெற்றோர் மற்றும்&
கடலூர் அருகே உள்ள கீழ்அருங்குணத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 34), விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தாமோதரன் (55) என்பவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தாமோதரன் தரப்பை சேர்ந்த தங்கவேல் என்பவர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைதான சுபாஷ் ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த […]
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. எந்தக் கட்சியைச் சொல்கிறோம் என்று தெரிகிறதா? அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி வேறு எந்தக் கட்சியாக இருக்கும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இப்போதெல்லாம் அந்தக் கட்சியின் […]
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் வேளாண்மை உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் அறிவழகன். இவர் ஓட்டப்பிடாரம் வேளாண்மை துறை அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்த வெளியூர் பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. மேலும் உதவி இயக்குனர் அறிவழகன் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசும் ஆடியோவும் வெளியானது. இதைத்தொடர்ந்து வேளாண்மை துறை உதவி இயக்குனர் அறிவழகன் மீது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆட்சித் தலைவர் இளம் பகவத் இது தொடர்பாக விசாரணை நடத்த […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







