கோவில்பட்டியை அடுத்த அஞ்சுரான்பட்டி ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஊர்மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.கும்பாபிஷேக விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் .நவநீத கண்ணன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர்சின்ன மாரிமுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்இம்மானுவேல் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2021ம் ஆண்டிற்கான காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம் வழங்கும் விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு அலுவலராக பணியாற்றி வரும் கன்னியாகுமரி மாவட்டம் குற்ற பிரிவு குற்ற புலனாய்வு துறை (சி.பி.சி.ஐ.டி.) இன்ஸ்பெக்டர் சாந்திக்கு 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக முதல்வரின் காவல் புலன்விசாரணை சிறப்பு பணி பதக்கத்தை முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழங்கினார் சிறப்புப்பணி பதக்கம் பெற்ற இன்ஸ்பெக்டர் சாந்தி, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனை […]
27 இளஞ்சிறார்கள் ஓட்டிய இருசக்கர வாகனங்கள் பறிமுதல்; பெற்றோர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
தூத்துக்குடியில் காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, 18 வயது நிரம்பாத இளஞ்சிறார்கள் 27 பேர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.மேற்படி இளஞ்சிறார்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுரைகள் வழங்கி 18 வயது நிறைவடையாமல் வாகனம் ஓட்டக் கூடாது என்று எச்சரித்தார். மேலும் பறிமுதல் செய்த இருசக்கர வாகனங்களை உரியவர்களிடம் […]
சென்னை தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தின் முதல் போலீஸ் கமிஷனர் என்ற பெருமை பெற்ற டி.ஜி.பி.ரவி, நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு வழி அனுப்பு விழா, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.விழா தொடக்கத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் வரவேற்று பேசினார். டி.ஜி.பி.சைலேந்திரபாபு விழாவுக்கு தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-நானும், ரவியும் மதுரை வேளாண்மை கல்லூரியில் ஒரு ஆண்டு ஒன்றாக படித்தோம். அதன்பிறகு நான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணி செய்தேன். […]
மத்திய அரசின் கலால் வரி குறைப்பின் காரணமாக பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை உடனே மாற்றியதால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும், இந்த இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஈடு செய்ய வலியுறுத்தி இன்று(மே31) ஒருநாள் பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்வது நிறுத்தப்படுவதாக விற்பனையாளர் சங்கத்தினர் கூறி இருந்தனர். மேலும், கடந்த 2017 ல் இருந்து இதுவரை விளிம்பு தொகை உயர்த்தப்படவில்லை எனவும், அதை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் […]
மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், காரவலி கிராமத்தில் உள்ள 30 வயது பெண் ஒருவர் அங்குள்ள கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார். அலறியபடி தண்ணீருக்குள் விழுந்த அவர்கள் மூழ்கிய நிலையில், இதுகுறித்து அறிந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த குழந்தைகளை மீட்டனர்.ஆனால் அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.கிணற்றில் மூழ்கியவர்களில் 18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட ஐந்து […]
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பனமாரம் பகுதியை சேர்ந்த சந்தியா கடந்த ஞாயிற்றுக்கிழமை வெங்கப்பள்ளி நோக்கி செல்லும் பஸ்சில் பயணித்தார். அப்போது, படிஞ்சராதரா என்ற நிறுத்தத்தில் மது போதையில் பூவாழன் என்ற நபர் பஸ்சில் ஏறினார். மது போதையில் இருந்த பூவாழன் சந்தியா அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்தார்.பஸ் சென்றுகொண்டிருந்த சிறிது நேரத்தில் சந்தியாவுக்கு மதுபோதையில் இருந்த பூவாழன் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சந்தியா வேறு இருக்கைக்கு சென்று அமரும்படி பூவாழனிடம் கூறினார். ஆனால், […]
மதுரையில் இருந்து தேனிக்கு அகலப்பாதையில் 12 வருடங்களுக்கு பிற்கு கடந்த 26-ந் தேதி ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரெயில் மதுரையில் இருந்து தேனி செல்லும் பஸ் பயண நேரத்தை விட குறைவாகவும், கட்டணம் குறைவாகவும் உள்ளது.இந்த நிலையில், மதுரை – தேனி சிறப்பு ரெயில் நேரத்தில் நாளை (புதன்கிழமை) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06701) மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 25 நிமிடங்கள் முன்னதாக காலை […]
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில் மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் என 6000-க்கும் மேற்பட்டோர் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு 7 வது ஊதியக் குழு பணப் […]
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் பஸ் ஸ்டாண்டில் நேற்று இரவு காளையார்கோவில் போலீசார் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது மாட்டு வண்டியில் ஒட்டகத்தை கட்டி வருவதை பார்த்து சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.அப்போது நாட்டாறு ஆற்றில் இருந்து மணல் கடத்தி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் வண்டியில் வந்தவரை கைது செய்து மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஒட்டகத்தை பறிமுதல் செய்து மறவமங்கலம் புறக்காவல் நிலையத்தற்கு கொண்டு சென்றனர்அவரிடம் நடத்திய விசாரனையில் அவர் சிவகங்கை மாவட்டம், […]







