தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால், த.வெ.க.வுக்கு ஆட்சி அமைக்க தேவையான 118 தொகுதிகளில் வெற்றி கிடைக்கவில்லை. த.வெ.க.வுக்கு 107 இடங்களிலேயே வெற்றி கிடைத்த நிலையில், காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி […]
கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி சார்பில் தென்மண்டல அளவிலான பெண்கள் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையிலான ஆக்கி போட்டி கடந்த 28 ந் தேதி தொடங்கியது. இன்று 3வது நாளாக கோவில்பட்டி செயற்கை புல் ஆக்கி மைதானம் மற்றும் வேல்ஸ் பள்ளி மைதானத்திலும் போட்டிகள் நடந்தன. காலை 6.30 மணி அளவில் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் கோபிசெட்டிபாளையம் சாரதா பள்ளி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை ஐ சி எப் பள்ளியை வெற்றி பெற்றது . […]
கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. அதிகாலையில் அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் மகளிர் 108, 1008 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், தீப்பெட்டி தொழில் சிறக்கவும், அனைத்து மக்களும் நலமுடன் வாழவும் அன்னையிடம் வேண்டி 1008 கஞ்சிக்கலயம், 27 அக்கினிசட்டி, 54 முளைப்பாலிகை ஏந்தி ஆன்மிக ஊர்வலம் நடைபெற்றது. ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை […]
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆறுமுகநகர் பகுதியில் சேகர் என்பவர் வீட்டின் கதவை உடைத்து 16½ பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். கடந்த 13.8.2026 அன்று நடைபெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக கழுகுமலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது பற்று வழக்குபதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் (26) […]
கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக்குளத்தை சேர்ந்தவர் செல்வம் (46). பிரபல ரவுடியான இவர் மீது குமரி மற்றும் தூத்துக்குடி தாளமுத்துநகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. செல்வத்திற்குச் சொந்தமான தோட்டம் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே சங்கனேரி கிராமத்தில் அமைந்துள்ளது. சம்பவத்தன்று தனது தோட்டத்திற்குச் சென்ற செல்வத்தை மர்ம நபர்கள் சிலர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். […]
நெல்லை பொதிகை நகரைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 56). இவரது மனைவி ஜூலியட். இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தங்கள் மகன் வீட்டிற்கு செல்வதற்காக இரவில் நெல்லையிலிருந்து தனியார் ஆம்னி பஸ்சில் புறப்பட்டு சென்றனர். அந்த பஸ் கோவில்பட்டிக்கு முன்னதாக கங்கைகொண்டான் சுங்கச்சாவடியை கடந்து கரிசல்குளம் விலக்கு அருகே உணவகத்தில் பயணிகள் சாப்பிடுவதற்காக ஓட்டுநர் பஸ்சை நிறுத்தியுள்ளார். பஸ்சில் இருந்த பெரும்பான்மையான பயணிகள் கீழே இறங்கி உணவகத்திற்குச் சென்றனர். ஜஸ்டின், ஜூலியட் தம்பதியும் தங்களது உடைமைகளை பஸ்சிலேயே […]
கோவில்பட்டியில் ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் சுகாதார முறைகளில் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறதா? காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட உணவு பொருள் கண்காணிப்பு நியமன அலுவலர் தலைமையிலான குழுவினர் கோவில்பட்டியின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் ஆய்வு மேற்கொண்டனர். வெளிநாட்டு தரத்தில் தயாரிக்கும் பிரபல சிக்கன் பர்கர், பீட்சா உள்ளிட்டவற்றை தயாரிக்கும் நிறுவனமான மீட் அண்ட் ஈட் உணவு விடுதியில் அதிகாரிகள் சோதனையிட்ட போது […]
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ் கல்ச்சுரல் அண்ட் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 11-ம் ஆண்டு மாநில அளவிலான யோகாசனப் போட்டி உண்ணாமலை பொறியியல் கல்லூரியில் நடந்தது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். யோகாசன போட்டி தொட க்க நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி கழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தலைமை தாங்கினார். தமிழ் கல்ச்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் […]
கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி சார்பாக தென்மண்டல அளவிலான பெண்கள் CBSE பள்ளிகளுக்கு இடையிலான ஆக்கிப்போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டிகள் அனைத்தும் நாக்அவுட் முறையில் நடத்தப்பட்டு அரை இறுதிக்கு தகுதி பெறும் நான்கு அணிகளுக்கு லீக் முறையில் நடத்தப்பட்டு முதல் நான்கு இடங்களை தீர்மானிக்கப்படும் இந்த போட்டியில் மொத்தம் 26 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இன்று 29 8 2026 இரண்டாவது நாள் போட்டியில் கோவில்பட்டி செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் 17 […]
உரம், பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்களுக்கு கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் அதிரடி உத்தரவு
கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள தனியார் உரக்கடை, பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், வேளாண்மை உதவி இயக்குநர் ஆர். மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் ஆர். மணிகண்டன் பேசியதாவது: – உர விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு தெளிவாகத் தெரியும் வகையில், அன்றைய தினத்திற்கான உரங்களின் இருப்பு மற்றும் விலைப்பட்டியலை கடையின் வெளிப்புறத்தில் அல்லது விவசாயிகளின் பார்வையில் படும் வகையில் கட்டாயமாகக் காட்சிப்படுத்த வேண்டும். […]







