கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வாங்கினார். கல்லூரி உறுப்பினர்கள் அருண், ராஜ்மோகன் மற்றும் கல்லூரி முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் கற்குவேல் ராஜ் வரவேற்புரை வழங்கினார். கோவில்பட்டி போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் வெங்கடேஷ் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார். முன்னாள் போக்குவரத்து காவல் ஆய்வாளர் லட்சுமணன் […]
சட்டசபையில் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை ; வெளிநடப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழக சட்டசபையில் இன்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தங்களை பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் அதிமுக… பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;- ”மேகதாது அணை தீர்மானத்தில் எதிர்க்கட்சித்தலைவர் கூறிய திருத்தத்தை முதல்-அமைச்சர் விஜய் சேர்த்தது அவையை மீறிய செயலாகும். … விதிகளுக்கு எதிராக தீர்மானத்தில் திருத்தம் செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவிரி விவகாரத்தில்… உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், மீண்டும் ஒரு […]
தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன் 1974-77 ம் ஆண்டு கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம் & தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனைஇணைந்து ஒவ்வொரு மாதமும்இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி வருகின்றன, அந்த வகையில் 168வது இலவச கண் பரிசோதனை முகாம் :28.6.2026 ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,யில் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் காலை 9 மணி […]
கோவில்பட்டி புறநகர் அப்பனேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா கார்டன் வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதி ஆகும் . தற்போது 260க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன, மேலும் ஏராளமான வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில் சமீபத்தில் ஒரு திருட்டு சம்பவம் நடந்தது. இதையொட்டி வெங்கடேஸ்வரா கார்டன் குடியிருப்போர் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோலப்பன், கனகராஜ், கோபாலகிருஷ்ணன், புருஷோத்தமன், ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு […]
கோவில்பட்டி மீனாட்சியம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுகிழமை மாலை சிவகாமி அம்பாள் சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, திருவீதி உலா நடைபெற்றது. மாலை 3.25 மணிக்கு கணபதி ஹோமம்,கும்ப பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனை. நடைபெற்றது. மாலை 4.25 மணிக்கு மேல் சிவகாமி அம்பாள் சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.நடந்ததது,. பக்தர்கள் அபிஷேகத்திற்கு பால், தயிர், இளநீர், அபிஷேக பொருட்கள், பூக்கள், பழங்கள் வல்னகினர்,.இவை அனைத்தும் அபிஷேகத்துக்கு […]
கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் தலைவர் க. தமிழரசன் தலைமையில் நடைபெற்றது. நடைபெற்ற வேலைகள் குறித்து செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின் பேசினார். கூட்டத்தில் இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநில துணை தலைவர் அபிராமி முருகன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் Kகருப்பசாமி, நிர்வாகிகள், பாலாஜி, மோகன், இந்திய தேசிய காங்கிரஸ் தேவராஜ், ராஜாராம், பழனிச்சாமி, மக்கள் நீதி மய்யம் ரமேஷ், ராதாகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி செல்வராஜ், தமிழ்நாடு காமராஜ் […]
மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் புதிய நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு திருத்தம் செய்ததற்கு அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. திருத்தம் கொண்டுவந்ததற்கான காரணம் குறித்து சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது; குடிநீர் பங்கீடுக்காக காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. குடிநீர் தேவைக்காக என்று சொல்லி புதிய அணையை கட்ட முயற்சி செய்கிறது. குடிநீருக்காக புதிய அணையை கட்டினால் சட்ட சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேகதாது அணையை கட்டுவதற்கான […]
தூத்துக்குடி விமான நிலையம் அருகே இன்று திடீரென சூறாவளி காற்று வீசியது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் அருகே விமான நிலையம் இன்று மாலை திடீரென சூறாவளி காற்று வீசியது. விமான நிலையம் அருகே ஏற்பட்ட திடீர் சூறாவளி காற்று வாகைக்குளம் சுங்கச்சாவடியை தாக்கியது. இதில் சுங்கச்சாவடியின் மேற்கூரைகள் அனைத்தும் சூறாவளி காற்றில் […]
நாடு முழுவதும் 551 நகரங்களில்n இன்று ஜூன் 21 நடைபெற்ற ‘நீட்’ மறுதேர்வை 22.7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினார்கள் தேர்வு மையத்துக்குள் பிற்பகல் 1.30 மணி வரை மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேர்வு எழுத வருகை தந்த மாணவர்கள், கடுமையான சோதனைகளுக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர் .பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு, மாலை 5.15 மணி வரை நடந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 31 மாவட்டங்களில் […]
திருவள்ளூரில் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயுக்கசிவு ; 7பேர் பலி-60க்கும் மேற்பட்டோர்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை தொழிலாளர்கள் பலர் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையில் திடீரென அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அமோனியா வாயுவை சுவாசித்த சுவாசித்த தொழிலாளர்கள் 60க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று அனைவரையும் மீட்டு அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதித்தனர. இந்நிலையில், அமோனியா வாயு கசிவால் […]







