நாடு முழுவதும் நீட் மறுதேர்வு 551 நகரங்களில் நடந்தது; 22.7 லட்சம் பேர் பங்கேற்பு


நாடு முழுவதும் 551 நகரங்களில்n இன்று ஜூன் 21 நடைபெற்ற ‘நீட்’ மறுதேர்வை 22.7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினார்கள்
தேர்வு மையத்துக்குள் பிற்பகல் 1.30 மணி வரை மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேர்வு எழுத வருகை தந்த மாணவர்கள், கடுமையான சோதனைகளுக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர் .பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு, மாலை 5.15 மணி வரை நடந்தது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 31 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் 307 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 489 மாணவ- மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர்.
சென்னையில் மட்டும் 43 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. முன்னதாக, நீட் நுழைவுத்தேர்வை எழுத வந்த மாணவியர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தேர்வு எழுத வந்த மாணவர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர்.
கடந்த முறை தேர்வு ரத்து செய்யப்பட்டதால் இந்த மறுதேர்வுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. வினாத்தாள் தயாரிப்பு பணியில் இருந்த ஒருவர்கூட இன்னும் வெளியே விடப்படவில்லை. ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளனர். தேர்வை மிகவும் நியாயமான முறையில் நடத்தி முடித்திட தேசிய தேர்வு முகமை விழிப்புடன் பணியாற்றி வருகிறது.

மற்றும் தண்ணீர் தேவையென்றால் தண்ணீர் பாட்டில் (வெளிப்படையானது) ஆகியவற்றை மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. செல்போன், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் கைக்கெடிகாரம் போன்றவை எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பேனாகூட எடுத்துச்செல்ல செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வுக்கான பிரத்யேக பேனா, தேர்வு அறையில் வழங்கப்பட்டது .







