பரந்தூர் விமான நிலையத்தை கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியை பல ஆண்டுகள் பின்னுக்கு தள்ளிவிடும்;
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண் 110-ன் கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் […]







