பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றம்
Oplus_16908288
கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தல பேராலயத்தின் விண்ணேற்புப் பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
வீரமாமுனிவர் பங்குகுருவாகப் பணியாற்றிய இப்பேராலயத்தில் விண்ணேற்புப் பெருவிழா கொடியேற்றத்தையொட்டி வியாழக்கிழமை மாலை சுமார் 6.45 மணிக்கு கோயில் முன்பு கொடிமரம் நடப்பட்டது. அதைத்தொடர்ந்து மிக்கேல் அதிதூதரின் திருவுருவப் பவனி நடைபெற்றது.

பின்னர், ஜெபமாலை தோட்டத்திலிருந்து கொடிகள் பவனியாக கோயில் முன்பு நடப்பட்ட கொடிமரத்திற்கு கொண்டுவரப்பட்டவுடன், குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் ஜி. ஏ. அனஸ்தாஸ் கொடியை ஆசீர்வதித்து, கொடிமரத்தில் முதலாவதாக திருத்தலக் கொடியையும், அதைத் தொடர்ந்து இறைமக்கள் கொண்டு வந்திருந்த வண்ணக் கொடியையும் அணிவகுப்பாக ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, ஆயர் இல்லம் அருள்பணி வி. கே. எஸ் .அருள்ராஜ் திருப்பலி மற்றும் மறையுரை நிகழ்த்தினார்.
இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றம் நிகழ்ச்சியை முன்னிட்டு, மாலை 5.30 மணி முதல் சமபந்தி விருந்து நடைபெற்றது.
கொடியேற்று விழாவையொட்டி, வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது.
நாளை 8 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மரியன்னை மாநாடு 9ஆம் தேதி காலை 8.30மணிக்கு புது நன்மை விழா, 14ஆம் தேதி மாலை 6.30மணிக்கு அருள் பணி அந்தோணி வியாகப்பன் தலைமையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட அருட் பணியாளர்கள் இணைந்து திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.

15ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு மதுரை உயர் மறை மாவட்ட முன்னாள் பேராயர் அந்தோனி பாப்புசாமி , பாளை மறை மாவட்ட நிர்வாகி மோட்ச ராஜன் ஆகியோர் தலைமையில் தேரடி ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறும். தொடர்ந்து தேர் பவனி நடைபெறும். அதைத் தொடர்ந்து, கும்பிடு சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 7 மணிக்கு திருப்பலி,நற்கருணை பவனி நடைபெறும்.
ஏற்பாடுகளை பேராலய அதிபர் எம். மோயீசன், இணைப் பணியாளர் ஏ. மரிய ஜோமிக்ஸ், ஆன்மீகப் பணியாளர் வி. எஸ். அந்தோணி ராஜ், களப்பணியாளர் ஏ. ஜே. சூர்யா, மரியின் ஊழியர் சபை அருள்சகோதரிகள், புனித தெரசாவின் கார்மேல் சபை அருள் சகோதரிகள் மற்றும் காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி இறைமக்கள் செய்து வருகின்றனர்.







