இந்திய ஆக்கி அணியில் இடம் பெற்று பெல்ஜியம் சென்று திரும்பிய கோவில்பட்டி வீரருக்கு வரவேற்பு
Oplus_16908288
இந்திய ஜூனியர் ஆக்கி அணி பெல்ஜியத்தில் நடைபெற்ற சர்வதேச ஆக்கி தொடரில் பங்கு பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி மாணவரும் கோவில்பட்டி எஸ் எஸ் துரைசாமி மாரியம்மாள் நினைவு கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவருமான வி.மணிமாறன் தேர்வாகி இந்திய அணிக்காக விளையாடினார்.

இந்திய ஜூனியர் ஆக்கி அணி பெல்ஜியத்தில் ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்ட்ரியா, பெல்ஜியம் ஆகிய நாடுகளுடன் மோதியது.
இந்தப் போட்டிகளில் இந்திய அணியில் தடுப்பு ஆட்டக்காரராக மணிமாறன் சிறப்பாக விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தினார்.
போட்டி நிறைவடைந்ததால் இந்திய அணி வீரர்கள் நாடு திரும்பினர். அந்த வகையில் கோவில்பட்டி வீரர் மணி மாறன் இன்று ஜூலை 20 அதிகாலை 5 மணி அளவில் பேருந்து நிலையம் வந்தபோது சிறப்பு விளையாட்டு விடுதியின் மேலாளர் அதிர்ஷ்டராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து பாண்டிராஜா சிறப்பு விளையாட்டு விடுதி ஆக்கி பயிற்சியாளர்கள் முத்துக்குமார், ஹானஸ்ட் ராஜ், மற்றும் முத்த ஹாக்கி வீரர்கள் மணிவண்ணன், மனோஜ் குமார், கரண் மற்றும் சர்வதேச வீரரின் தாய் சீனியம்மாள், தந்தை விஜயராஜ், மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதியின் கேர் டேக்கர் உதயராஜ், மற்றும் பலர் வரவேற்றனர்







