கோவில்பட்டி சிஎஸ்ஐ ஆலயத்தில் இலவச கண் பரிசோதனை, மருத்துவ முகாம்

கோவில்பட்டி சிஎஸ்ஐ தூய பவுலின் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 10 சிறப்பு டாக்டர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்

குருவானவர் இம்மானுவேல் கிறிஸ்பஸ், தலைமையில், செல்வம் எசன்ஸ் மார்ட் ஞானதுரை முன்னிலையில் இந்த முகாம் நடைபெற்றது.
சிஎஸ்ஐ தூய பவுலின் ஆலய ஆலய நிர்வாக கமிட்டி செயலாளர் ஜேக்கப் ராஜாமணி, பொருளாளர் ஜான் ஜெபராஜ், டிசி உறுப்பினர்கள் லிவிங்ஸ்டன், தங்கையா,எழில் பிரபு, பிளஸ்வின், சுகிர்தராஜ்,ஆண்கள் ஐக்கிய சங்க செயலாளர் பிரபாகரன் மற்றும் கிருபாகரன் ,கிறிஸ்டோபர்,ஜான் ஜோதி, மேத்தியூ, இன்பராஜ் தனவந்தன், காட்வின், சாமுவேல்.
ஜெயராஜ். ஆகியோர் மருத்துவ முகாம்களை ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.

முகாமின் போது பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனையும் நடைபெற்றது. பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அவர்களுக்கு மூன்று நாள் மருந்துகளும் ஆலோசனைகளும் உணவும் வழங்கப்பட்டது .
சிறப்பு டாக்டர்கள் விஜயராஜா, தேன்மொழி, மோசஸ் பால்,சுபா, சாந்தினி, கமலா, சுதன், தேவசேனா, மோனிகா, இம்மானுவேல்டேவிட் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.







