குறைதீர்க்கும் கூட்டம் :போலீஸ் சூப்பிரண்டிடம் 19 பேர் மனு
Oplus_16908288

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்இன்று (18.07.2026) நடைபெற்றது.

கூட்டத்தில் மனு கொடுக்க வந்த 19 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா விடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவிட்டார். அதேபோன்று அனைத்து காவல் உட்கோட்ட அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.

அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் இதில் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று குறைகளை தீர்த்து வைக்க முயற்சி மேற்கொண்டனர்.







