கோவில்பட்டி கோட்டத்தில் சனிக்கிழமை மின்சப்ளை நிறுத்தம்
கோவில்பட்டி மின்பகிர்மானக் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ஜூலை 18 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்பகிர்மான கழக செயற்பொறியாளர் எஸ்.பாபு தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் வருமாறு :-
கழுகுமலை உபமின் நிலையம்: கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி, குருவிகுளம்,

கோவில்பட்டி உபமின் நிலையம் : கோவில்பட்டி, புதுக்கிராமம், இலுப்பையூரணி, வேலாயுதபுரம், சங்கரலிங்கபுரம், லாயல்மில் பகுதி, லட்சுமிமில் பகுதி, முகமதுசாலியாபுரம், ஆலம்பட்டி, இனாம்மணியாச்சி. தோனுகால், படர்ந்தபுளி.
எப்போதும்வென்றான் உபமின் நிலையம் : எப்போதும்வென்றான், எட்டயபுரம், கீழமங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், ஒட்டநத்தம், குளத்தூர், சூரங்குடி,
விஜயாபுரி உபமின் நிலையம் : திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், ஈராச்சி, விஜயாபுரி, கசவன்குன்று, துறையூர், காமநாயக்கன்பட்டி, மந்தித்தோப்பு, ஊத்துப்பட்டி, குருமலை, வேப்பன்குளம், மும்மலைப்பட்டி,
சிட்கோ உபமின் நிலையம் :முத்துநகர், சிட்கோ, கணேஷ்நகர், தங்கப்பன்நகர், ஜோதிநகர், புதுரோடு,
செட்டிகுறிச்சி உபமின் நிலையம் : செட்டிகுறிச்சி, சிதம்பரம்பட்டி, கட்டாலங்குளம், வெள்ளாளன்கோட்டை, ஓலைகுளம், திருமங்கலக்குறிச்சி, பெரியசாமிபுரம், மூர்த்திஸ்வரபுரம்,

சன்னதுபுதுக்குடி உபமின் நிலையம் : கயத்தாறு பேரூராட்சி பகுதிகள், ராஜாபுதுக்குடி, டி.என்.குளம், ஆத்திகுளம், தெற்கு இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம், சாலைபுதூர், மு.கைலாசபுரம், கீழக்கோட்டை, கொடியன்குளம், என்.புதூர், நாரைக்கிணறு, புளியம்பட்டி, சவலாப்பேரி, ஆலந்தா ஒரு பகுதி, பிராஞ்சேரி, இத்திகுளம், வடக்கு செழியநல்லூர், காங்கீஸ்வரன்புதூர், குப்பணாபுரம், பருத்திகுளம், சன்னதுபுதுக்குடி, வடகரை மற்றும் காற்றாலை மின்தொடர் 1, 2 ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்
.







