கோவில்பட்டியில் காமராஜர் உருவச்சிலைக்கு மாலை அணிவிப்பு
Oplus_16908288
கோவில்பட்டி மெயின் ரோட்டில் ஏற்கனவே இருந்த பெருந்தலைவர் காமராஜர் சிலை புதுப்பிக்கப்பட்டு புது பொலிவுடன் முழு உருவ வெண்கலை சிலையாக வடிவமைக்கப்பட்டு நேற்று நிறுவப்பட்டது.

நடிகர் லெஜெண்ட் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜர் சிலையை திறந்து வைத்தார்
காமராஜர் 124 வது பிறந்தநாள் அன்று திறந்து வைக்கப்பட்ட புதிய சிலைக்கு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
.

கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மாலையணிவித்து மரியாதை செய்யப்பட்டது.கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், செயலாளர் சுபேதார்
கருப்பசாமி, தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், இந்திய தேசிய காங்கிரஸ் துரைராஜ், இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநிலத்துணை தலைவர் அபிராமி முருகன், மனித நேய மக்கள் கட்சி செண்பகராஜ் ஐ. என். டி. யு. சி.மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பில் மரியாதை

கோவில்பட்டியில் காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.
அதிமுக நகர செயலா ளர் விஜயபா ண்டியன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் கவியரசன் ஆகியோர் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி னர்.
ஒன்றிய செயலா ளர்கள் பழனிச் சாமி, அன்புராஜ், செல்வக் குமார், போடுசாமி, அதி முக நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, பத்மாவதி, லட்சுமணபெருமாள், வழக்கறிஞர் ரத்தினராஜ், ரமேஷ், குழந்தைராஜ், வேல்முருகன், மணியாச்சி மாரிமுத்து பாண்டியன், வெள்ளைச்சாமி, முனிய சாமி,உள்ளிட்டநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.







