கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் 124வது பிறந்தநாள் விழா
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பெருந்தலைவர் காமராஜர் 124வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் லஞ்சம்,ஊழலுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
நகர தலைவர் அருண்பாண்டியன், வட்டார தலைவர் ரமேஷ்மூர்த்தி, முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜாராம், மாவட்ட பொது செயலாளர் ஐஎன்டியூசி ராஜாசேகரன், மாவட்ட செயலாளர் துரைராஜ், ராஜா, எஸ்சிஎஸ்டி பிரிவு துணை தலைவர் மாரிமுத்து, ஆழ்வார்சாமி,முன்னாள்காவல் உதவி ஆய்வாளர் வேணுகோபால், வட்டார தலைவர் செல்லதுரை சுடலைமணி,ஆறுமுகம்,பிரபாகரன்,ராகுல் முருகன், காளியப்பன், காளிராஜ்,நல்லமதி, வேல்சாமி, கோபால், சண்முகவேல், பிச்சைகனி, அந்தோணிமுத்துகிருபாகரன்,அய்யாசாமி, ஆல்வின், பொம்மி மற்றும் பலர் கலந்து கொண்டனர்








