கல்வி வளர்ச்சி தின விழா: காமராஜர் உருவ மாஸ்க் அணிந்து மாணவர்கள் ஊர்வலம்
Oplus_16908288
நாடு முழுவதும் கர்மவீரர் காமராஜரின் பிறந்த தினமான ஜூலை 15ம் தேதியை கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாட தமிழக அரசு அறிவித்துள்ளது.

தெற்கு கோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து துவக்கப் பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சி தின விழாவில் பள்ளி மாணவர்கள் காமராஜரின் மாஸ்க் அணிந்து பள்ளி முன்பிருந்து ஊர்வலமாக முக்கிய விதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர்.
காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.மாணவர்கள் அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழ் பாப்திஸ்து பள்ளி தலைமை ஆசிரியர் ராஜையா தலைமை தாங்கினார்.
கோவில்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரமேஷ் குமார்,சீனிவாசன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி ஆசிரியர் ஜெயராணி அனைவரையும் வரவேற்றார்.

கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருக்குறள் புத்தகம் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.
முடிவில் ஆசிரியை உஷா நந்தினி நன்றி கூறினார்.







