கோவில்பட்டியில் விடுமுறை நாள் ஆக்கி போட்டி: வேல்ஸ் வித்யாலயா, காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி அணிகள் வெற்றி
Oplus_16908288
79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஆக்கி போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் நடந்து வருகின்றன

கடந்த 21 6 2026 அன்று முதல் போட்டிகள் நடந்து வருகின்றன லீக் மற்றும் நாகவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன இப் போட்டியில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. லீக் சுற்றில் தற்போது கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி 6 புள்ளிகளும் கயத்தாறு அரசு மேல்நிலைப் பள்ளி 7 புள்ளிகளும் பெற்று அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (12.07.2026) நடைபெற்ற முதல் போட்டியை நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளர் வழக்கறிஞர் ரத்தின ராஜா துவக்கி வைத்தார். வேல்ஸ் வித்யாலயா பள்ளி 3 – 0 என்ற கோல் கணக்கில் நாடார் மேல்நிலைப்பள்ளி ப்ளூ அணியினரை வெற்றி பெற்றனர்
இரண்டாவது போட்டியில் கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அணி 10 – 0 என்ற கோல் கணக்கில் வானரமுட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அணியினரை வெற்றி பெற்றனர்.

போட்டியின் நடுவர்களாக , மாரியப்பன், கௌதமன், காளிதாஸ் கவியரசன், சண்முகப்பிரியா, பேபி, , ஆகியோர் செயல்பட்டனர் போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்செல்வம் வேல்முருகன் ஆகியோர் செய்து வருகிறார்கள் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (19.07.2026 ) காலை 6.30 மணி அளவில் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி ரெட் அணியினரும் கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளி அணியினரும் விளையாட உள்ளனர்.
அடுத்து கோவில்பட்டி செயின்ட் பால்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அணியினரும் தூத்துக்குடி சீனாவானா அரசு மேல்நிலைப்பள்ளி அணியினரும் விளையாட உள்ளனர்







