மாணவ, மாணவிகளுக்கான பூப்பந்து போட்டி; கோவில்பட்டியில் நடந்தது
கோவில்பட்டி, கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) விளையாட்டுத்துறை சார்பில் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான (ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு) பூப்பந்து போட்டியை நடத்தியது.
தொடக்க விழாவில் கல்லூரி செயலர் பா.மகேந்திரன் தலைமை உறையாற்றி விளையாட்டுப் போட்டியைத் துவக்கிவைத்தார். கல்லூரியின் முதல்வர் அ.பாண்டியராணி, தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பி. உமாதேவி மற்றும் சுயநிதிப்படப்பரிவுகளின் இயக்குநர் பா.மகேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றன. மாலையில் இறுதி போட்டியும் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றன. இதில் கல்லூரியின் முதல்வர் அ.பாண்டியராண மற்றும் சுயநிதிப்படப்பரிவுகளின் இயக்குநர் பா.மகேஷ்குமார், உடற்கல்வி இயக்குநர் கோதையம்மாள் மற்றும் போட்டியின் ஒருங்கிணைப்புச் செயலர் அ. குமரேச சீனிவாசன் ஆகியோர் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பராாட்டு சான்றிதழ்களை வழங்கினர்.
ஆண்கள் பிரிவில் மெய்ஞ்ஞானபுரம் ஆம்ப்ரோஸ் மேல் நிலைப்பள்ளி முதலிடத்தையும், எட்டையபுரம் ராஜாஸ் மேல் நிலைப்பள்ளி இரண்டாமிடத்தையும், திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடத்தையும், கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மேல்நிலை பள்ளி நான்காம் இடத்தையும் பெற்றன.
பெண்கள் பிரிவில் திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக்பள்ளி முதலிடத்தையும், கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் C அணி இரண்டாமிடத்தையும், தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடத்தையும் கோவில்பட்டி கம்மவார் மேல்நிலைப்பள்ளியின் B அணி நான்காமிடத்தையும் பெற்றன.

முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில் தமிழ்துறைத் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியரான சா.தங்கமாரியப்பன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
பரிசரிளிப்பு விழாவினைத் தொடர்ந்து உடற்கல்வி இயக்குநர் கோதையம்மாள் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளைக் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் குமரேச சீனிவாசன், உதவிப் பேராசிரியர்கள் அலுவலகர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் செய்திருந்தனர்.







