கோவில்பட்டி இந்திரா நகரில் கலச விளக்கு வேள்வி பூஜை
மேல்மருவத்தூர் பங்காரு அம்மா அடிகளார் 86வது அவதார பெருமங்கல விழாவையொட்டி கோவில்பட்டி இந்திரா நகரில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.

இயற்கை சீற்றம் தணியவும், மக்கள் நலமுடன் வாழவும், மழைவளம், விவசாயம் வளம்பெறவும், தீப்பெட்டி தொழில்வளம் சிறக்கவும், பாதுகாப்பான பட்டாசு தொழில் வேண்டியும், கல்வி அறிவு மேலாங்கவும், வேலைவாய்ப்பு பெருக வேண்டியும் வேள்வி பூஜை நடைபெற்றது.
ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி முருகன் தீபம் ஏற்றி வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார். இதில், ஏராளமான மகளிர் 108, 1008 மந்திரங்கள் படித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு சமுதாயப்பணியாக வேஷ்டி, சேலைகளை மன்ற தலைவர் ஆர்த்தி வழங்கினார்.
ஓம்சக்தி கொடியை மின்பாதை ஆய்வாளர் பண்டார முருகன் ஏற்றினார். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி தொடங்கிவைத்தார்.

விழாவில், தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி, மன்ற பொருளாளர் அழகு மாணிக்கம், பொறுப்பாளர்கள் பேச்சியம்மாள், லலிதா, சிங்கராஜ், அழகர்சாமி, உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.







