கோவில் விழா:முளைப்பாரி சுமந்து பக்தர்கள் ஊர்வலம்
கோவில்பட்டி ஸ்ரீமகா புவனகாந்தாரி அம்மன் கோவில் 60 ம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 24ம் தேதி கால் நாட்டு விழா கொடியேற்இத்துடன் நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பமானது.

நேற்று 9ம் நாள் நிகழ்ச்சியாக முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் திரளாக கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ரவிப்பாண்டியன் ,தலைவர் ஏமராஜ்.செயலாளர் மகேந்திரன்,பொருளாளர் காந்தாரிமுத்து மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
தினமும் இரவு கும்மி பாட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.காந்தாரி அம்மனுக்கு பங்குனி பொங்கல் விழா 10 நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது








