பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவருக்கு சாகும் வரை சிறை தண்டனை; தூத்துக்குடி போக்சோ கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
கடந்த 2023ம் ஆண்டு தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமி மற்றும் 8 வயது சிறுவன் ஆகியோரை துன்புறுத்தி பாலியல் தாக்குதல் நடத்திய தூத்துக்குடியைச் சேர்ந்த சின்னதம்பி என்ற லம்பா (34/26) என்பவர் மீது தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கை காவல்துறையினர் விசாரணை விசாரித்து இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி த. பிரீத்தா நேற்று (1.4.2026) மேற்படி எதிரி சின்னதம்பி என்ற லம்பா என்பவரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு சாகும் வரை வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை மற்றும் ரூ 20,000/- அபராதம் விதித்தும் மேலும் பாதிக்கப்பட்ட 2 சிறுவர்களுக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.5 லட்சம் என மொத்தம் 10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
மேலும் குற்றவாளி சின்னதம்பி (எ) லம்பா ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு 2025ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு 2 நீதிமன்றம் (அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தற்போது சிறையில் உள்ள நிலையில் இந்த போக்சோ வழக்கில் சாகும் வரை சிறைதண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் மற்றும் இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய காவல் ஆய்வாளர்கள் சாந்தகுமாரி, ராமலெட்சுமி, நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் ஜுடு ஏஞ்சலோ ,, வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர்கள் சமுத்திரகளி,. ரபிலாகுமாரி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் பாராட்டினார்.
இன்னொரு வழக்கில் தீர்ப்பு
கடந்த 2013ம் ஆண்டு கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அத்துமீறி வீடுபுகுந்து மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கடம்பூரைச் சேர்ந்த சேர்மராஜ் (62/26) என்பவரை கைது செய்தனர்.
மேற்படி வழக்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (PCR Court) நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி. வசீத்குமார் நேற்று (01.04.2026) மேற்படி எதிரி சேர்மராஜ் என்பவரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 6,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.







