பாண்டியனார் மக்கள் இயக்க 9 ம் ஆண்டு தொடக்க விழா

பாண்டியனார் மக்கள் இயக்க 9 ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கராத்தே செல்வின் நினைவேந்தல் பொதுக்கூட்டம் காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைவர் சீனிராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஜய் கணேஷ் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகி விக்னேஷ் கார்த்திக் வரவேற்று பேசினார்.

காமராஜர் ஆதித்தனார் கழக நிறுவனர் கராத்தே செல்வின் திருவுருவப்படத்தை செட்டிகுளம் ராஜ் திறந்து வைத்தார். சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. மாநில பொருளாளர் டாக்டர் திலகபாமா, சிம்ம பேரவை தலைவர் ராவணன் ராமசாமி, நாடார் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் மின்னல் ஸ்டீபன், அகர கட்டு லூர்து ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தலைமை நிலைய செயலாளர் குரு பிரசாத், கணேஷ் மூர்த்தி, மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டார நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.








