தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தேர்வு; கோவில்பட்டியில் 31-ந்தேதி நடக்கிறது
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பாக ஆண்டுதோறும் சப் ஜூனியர் ஜூனியர், சீனியர் , ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணி தேர்வு செய்து தேசிய போட்டிக்கு விளையாட அழைத்து செல்லப்படுவர்.
இந்த ஆண்டு ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தேர்வு போட்டியாக மாநில ஆக்கி சாம்பியன் போட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல் 11 முதல் 14 வரை நடைபெற உள்ளது.

இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி கலந்து கொண்டு விளையாட இருப்பதால் தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தேர்வு கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மார்ச் 31ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணி அளவில் நடைபெற உள்ளது
மாவட்ட ஜூனியர் ஆக்கி அணி தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் வீராங்கனைகள் 1.1.2007 க்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவராகவோ அல்லது தூத்துக்குடி மாவட்டத்தில் ஏதாவது ஒரு பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருபவராகவோ இருக்க வேண்டும்.
தேர்வுக்கு வரும் வீராங்கனைகள் கண்டிப்பாக பத்தாம் வகுப்பு சான்றிதழ் நகல், ஆதார் நகல், கொண்டு வர வேண்டும் மேலும் விவரங்களுக்கு 9443190781 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று தேர்வுக்குழு அறிவித்து உள்ளது.








