கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியில் விளையாட்டு விழா; சிறந்த வீரராக விஷால் தேர்வு




கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25வது விளையாட்டு விழா நடைபெற்றது, மாணவர்கள் ஒலிம்பிக் ஜோதியினை கையில் ஏந்தி கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து கல்லூரி வரை தொடர் ஓட்டமாக கொண்டு வந்து கல்லூரி வளாகத்தில் ஒலிம்பிக்ஜோதி ஏற்றி வைத்தனர்..
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நடந்த கபடி, கைப்பந்து , கிரிக்கெட், எறிபந்து , தடகள போட்டிகளில் வென்றவர்களுக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டது. பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பைகள் மற்றும் சுழற் கேடயங்கள் வழங்கப்பட்டது. கல்லூரி வளாகத்தில் தேசியக்கொடி ஒலிம்பிக் கொடி, கல்லூரி கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

விளையாட்டு விழாவிற்கு நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஆர்.எஸ் ரமேஷ் தலைமை தாங்கினார், கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க துணை தலைவர் செல்வராஜ், செயலாளர் ஜெயபாலன்,பத்திரகாளி அம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..கல்லூரி செயலாளர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி உடற்கல்வித் துறை தலைவர் செல்லத்துரை ஆண்டறிக்கை வாசித்தார்.
திருநெலல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற் கல்வி மற்றும் விளையாட்டு துறை இயக்குனர் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சுழற்கேடயங்கள் வழங்கி பேசினார்.
அவர் பேசுகையில்,”இந்தியா முழுவதும் உள்ள 1200 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் விளையாட்டு துறையில் 4வது இடத்தில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ளது.தேசிய அளவில் நடைபெறும் ஆக்கி மற்றும் பளுதூக்கும் போட்டிகளில் கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர். கல்வியும் உடற்பயிற்சியும் இரண்டு கண்கள் போன்றது.உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம்.வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.விளையாட்டு ஒரு மாணவனுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும்.தேவையற்ற கெட்ட பழக்க வழக்கங்களை தடுக்க விளையாட்டு உதவும்.தினசரி 45 நிமிடமாவது விளையாட்டு ஒரு மனிதனுக்கு தேவைப்படும்.” என்று குறிப்பிட்டார்.’
வழக்கறிஞர் அரவிந்த் கலந்து கொண்டு ஏ.பி.கே பழனி செல்வம் நினைவு கோப்பையை ஒட்டு மொத்த சாம்பியன் பெற்ற ஆண்கள் பிரிவில் துரைராஜ்க்கும் பெண்கள் பிரிவில் சரண்யாவுக்கும் வழங்கினார். 2025 -26 ம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசு உடற்கல்வித்துறை 2ம் ஆண்டு மாணவர் விஷாலுக்கு வழங்கப்பட்டது.

விழாவில் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் அருண்,ராஜ்மோகன்,சரவணக்குமார், வழக்கறிஞர் செல்வம்,கோவில்பட்டி ரோட்டரி சங்க துணை தலைவர் முத்து முருகன்,கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் பிரபு,கோவில்பட்டி கம்பன் கழக செயலாளர் சரவண செல்வன், நாடார் உறவின்முறைச்சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராஜா அமரேந்திரன்,தாயப்பன்,வெங்கடேஷ்,பழனி முருகன், சௌந்திரபாண்டியன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா முடிவில் கல்லூரி முதல்வர் செல்வராஜ் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை உடற் கல்வித்துறை தலைவர் செல்லத்துரை தலைமையில் பேராசிரியர்கள் ஜெயசிவா,ரமேஷ் பாண்டியன்,வெங்கடேஷ் ஆகியோர் செய்திருந்தனர்







