கோவில்பட்டி அருகே குருமலை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
கோவில்பட்ட்டியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் குருமலை கிராமம் உள்ளது. இங்கு 1௦௦௦ ஆண்டுகள் பழமையான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது.
பல நூறு ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெறாமல் இருந்த இக்கோவிலுக்கு குருமலை கிராம மக்கள் மற்றும் சுற்றுப்புற ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி திருப்பணிகள் செயுது கும்பாபிஷேகம் நடத்துகிறார்கள்.

அதன்படி கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது, யாகசாலை குண்டங்கள் அமைத்து பூஜைகள் நடைபெற்று வருகின்றன, இன்றும் காலையில் இருந்து பூஜைகள் தொடர்ந்து நடந்து வருகிறது,
நாளை (புதன்கிழமை) காலை 9.16 மணியில் இருந்து 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கோவில் கோபுர கலசங்களில் பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள தீர்த்தம் ,ஊற்றி குடமுழுக்கு செய்யப்படுகிறது,
கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை காலையில் இருந்தே அன்னதானம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது,.








