சி. எஸ். ஐ. தூத்துக்குடி நாசரேத் திருமண்டல செயலாளர், உயர்நிலை கல்வி நிலவரக்குழு செயலாளருடன் கல்வி நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் சந்திப்பு
Oplus_16908288

சி. எஸ். ஐ. தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் 3வது முறையாக , இறைமக்கள் செயலாளராக எஸ்.டி கே. ராஜன், , உயர்நிலை கல்வி நிலவரக்குழு செயலாளராக ஆடிட்டர் ஜெபச்சந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களை கோவில்பட்டி சி. எஸ். ஐ.சபை சேகரத்தில் இருந்து , திருமண்டலத்தில் உள்ள ராக்லேண்ட் சபைமன்றத்தில் அமைந்துள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களின் பொறுப்புகளில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள், மூத்த வழக்கறிஞம் , திருமண்டல நீதிமன்ற இயக்குநருமான ஆண்ட்ரூஸ் சாம்ராஜ் தலைமையில் சந்தித்து ஆசி பெற்றனர்.
திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள் பாண்டவர்மங்கலம் தன்ராஜ் ,
கே.கைலாசபுரம் பிரவீன் , பாண்டவர்மங்கலம் சேகர தலைவர் சாமுவேல் ஜேசுதாசன் , நாகலாபுரம் டி. டி. டி. ஏ. உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் ராஜபாண்டியன் ,

கே. கைலாசபுரம் டி. டி. டி. ஏ. உயர்நிலைப் பள்ளி தாளாளர் டேவிட் ,
நாகலாபுரம் சி. எஸ். ஐ.பெண்கள் பயிற்சி மையத்தின் மூத்த ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராஜூ , ஆசிரியர் ஜேம்ஸ் சூர்யபிரகாஷ் , தொழிலதிபர் நிலேஷ் ராய் , ஓய்வு பெற்ற உதவி இயக்குநர் ராஜாமணி ,
வக்கீல் செல்வின் ராஜ்குமார் ,
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் ஜெயகுமார் நடராஜன் , துரைராஜ் மோகன்தாஸ் , ஜஸ்டஸ் மனோகரதாஸ் பாண்டியன் , தன்ராஜ் , ஐசக் அருள்ராஜ் , ராஜீவ் நகர் சி. எஸ். ஐ. ஆலய பொருளாளர் செல்லதுரை , செல்வின் குமார் , அலெக்ஸ் சாமுவேல் , விக்டர் ஜெபராஜ் , ஸ்பர்ஜன் பால் வில்லியம்ஸ் , கடலையூர் டி. டி. டி. ஏ. நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இம்மானுவேல் முத்துராஜா கடலையூர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து பெற்றனர்







