சமூகப் பணிகளில் சாதனை படைத்த மகளிருக்கு “மிளிரும் நட்சத்திரம்” விருது
Oplus_16908288
விளாத்திகுளம் பாரதி இலக்கிய மன்றம் மற்றும் கோவில்பட்டி அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளை சார்பில் மகளிர் தின விழா விளாத்திகுளம் TNDTA பள்ளியில் நடைபெற்றது.
தமிழாசிரியை புளோரா பேரின்ப மணி வரவேற்றார்.தமிழ் ஆர்வலர் சம்பகுளம் மனோகர் தலைமை தாங்கினார். பாரதி இலக்கிய மன்றத்தலைவர் கவிஞர் இப்ராஹிம், கழுகுமலை திருவள்ளுவர் மன்ற தலைவர் பொன்ராஜ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்வி, கலை இலக்கியம் மற்றும் சமூகப் பணிகளில் சாதனை படைத்த மகளிருக்கு “மிளிரும் நட்சத்திரம்” விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளை நிறுவனர் திருமலை முத்துச்சாமி விருதுகளை வழங்கி வாழ்த்திப் பேசினார்.
பனையூர் நாடார் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மரிய அனிதா, பட்டிமன்றப் பேச்சாளர் காயத்ரி வினோத்குமார், வழக்கறிஞர் முத்து செல்வராணி, விளாத்திகுளம் நூலகர் சுமித்ரா, தலைமைக் காவலர் கருப்பாயி, ஆசிரியை பொன்மலர் ஷீலா ஆகியோர் விருது பெற்றனர்.

கோவில்பட்டி சுப்புலட்சுமி தலைமையில் பாரதி பட்டிமன்றக் குழுவின் மகளிர் தின சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. மன்றத்தின் நிறுவனர் முத்துப்பாண்டி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். மன்றச் செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.







