ஜி. வி. என். கல்லூரி புள்ளியியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Oplus_16908288
கோவில்பட்டி, கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி புள்ளியியல் துறையில் 2014 ஆம் ஆண்டு முதல் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் பா. மகேஷ்குமார் முன்னிலை வகித்து தலைமை உரையாற்றினார். இவ்விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு கற்பித்த பேராசிரியர்கள் கலந்து கொண்டுசிறப்புரையாற்றினார்கள். புள்ளியியல் துறைத் தலைவர் தெ. சாரதாதேவி வாழ்த்துரை வழங்கினார்

இந்நிகழ்வில், முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, தற்போதைய மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் பேசினார்கள்.
முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போது பயிலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ச நடைபெற்றன. முன்னாள் மாணவர்கள் அனைவரும் தங்கள் ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடி ஆசி பெற்றனர்.

தொடக்கத்தில் மூன்றாம் ஆண்டு மாணவி சு.பண்புமதி வரவேற்று பேசினார். முடிவில் முன்னாள் மாணவர் த. சிவபாண்டியன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி செயலர் மகேந்திரன், முதல்வர் முனைவர் மூ. சுப்புலெட்சுமி ஆகியோர் வழிகாட்டுதலின்படி, புள்ளியியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்







