சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் தொடங்க வேண்டும்; சரத்குமார் கூட்டிய ரசிகர் மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்
Oplus_16908288

நடிகர் சரத்குமார் நடத்தி வந்த சமத்துவ மக்கள் கட்சியை கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்தார். தொடர்ந்து அக்கட்சியில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இருப்பினும் அவருக்குக் கட்சியில் பெரிய அளவில் பொறுப்புகள் வழங்கப்படவில்லை எனவே பாஜக தலைமையின் மீது அதிருப்தியில் இருந்து வந்தாக கூறப்படுகிறது. அதோடு அவருடைய ஆதரவாளர்களுக்கும் பொறுப்புகள் எதுவும் பெரிய அளவில் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியிலும் அவர் இருந்ததாககூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை தியாகராயர்நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் தன்னுடைய ஆதரவாளர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆகியோருடன் இன்று (22.3.2026) ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்கள் பலரும், “சரத்குமாருக்கு உடனடியாக கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டும். இல்லையென்றால் பாஜகவில் இருந்து நாங்கள் விலகத் தயாராக இருக்கிறோம். சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் தொடங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அதற்கு சரத்குமார்+கூறியதாவது :-
“எனக்கும் இந்த ஆதங்கம் உள்ளது. கட்சியில் 2 ஆண்டுகளாக உள்ளோம். நான் ஏற்கனவே கட்சியில் இணையும் போது எனக்கு நிச்சயமாகத் தேசிய அளவில் பொறுப்புகள் வழங்கப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் என்ற பதவி மட்டும்தான் கொடுக்கப்பட்டது. ஆனால் கட்சி என்னைப் பெரிய அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதே சமயம் நம்முடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

இந்த விவகாரம் குறித்து உடனடியாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய தலைமையிடம் முறையிட இருக்கிறேன்.
எனக்கும், என்னுடைய ஆதரவாளர்களுக்கும் உடனடியாக பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்டமாக ஆதரவாளர்களின் ஆலோசனைப்படி கட்சியிலிருந்து விலகுவது சம்பந்தமாக என்னுடைய நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்.
இவ்வாறு தொண்டர்கள் மத்தியில் சரத்குமார் பேசியுள்ளார்.







