கோவில்பட்டி முகாமில் கண்புரை இலவச அறுவை சிகிச்சைக்கு 16 பேர் தேர்வு
Oplus_16908288
கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி 1974-1977 ஆண்டு பழைய மாணவர் சங்கமும், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கமும், அரவிந்த் கண் மருத்துவமனனயும் இணைந்து இன்று (ஞாயிறு) இலவசகண்சிகிச்சைமுகாம் நடத்தின.

கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயிண்ட் பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நடந்த முகாமுக்கு மாணவர் சங்க தலைவர் ஜி.ஜெயராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் என்.ராஜவேல் மற்றும் சங்க நிர்வாகிகள் முத்து கிருஷ்ணன்ராஜேந்திரன், கே. கே.பாலசுப்ரமணியன்,ராஜேந்திரன்,அருள்ஜான்,பாலகுமார், என்.சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனார்.
முகாமில் 116 நோயாளிகள் பரிசோதனைகள் மேற்கொண்டனர். இதில் கண்புரை இலவச அறுவை சிகிச்சைக்கு 16 பேர் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.








