அமைப்பு சாரா தொழிலாளர்ளுக்கு ஓய்வூதியம் முறையாக வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் நல வாரிய அட்டை வைத்துள்ள தொழிலாளர்களுக்கு முறையாக ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் முக்குலத்தோர் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முக்குலத்தோர் அமைப்பு சாரா, அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் சங்க மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டு, 3 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. நலவாரிய உறுப்பினர்களுக்கு முறையாக ஓய்வூதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி கோஷமிட்டனர்.

தொடர்ந்து அவர்கள் சார் ஆட்சியர் ஹூமான்ஷு மங்களிடம் வழங்கிய மனுவில் கூறி இருந்ததாவது:-
-‘, கோவில்பட்டி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு தொழிலாளர் நலவாரிய அட்டை வைத்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் முறையாக வழங்கப்படவில்லை. தற்போது 3 மாதமாக ஓய்வூதியம் வரவில்லை.
இதுகுறித்து விசாரித்தால் தமிழ்நாடு முழுவதும் யாருக்கு வரவில்லையென தெரிகிறது. ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஓய்வூதியம் தாமதமாக கிடைப்பதால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே மாதந்தோறும் முறையாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொழிலாளர் நலவாரிய அட்டை வைத்துள்ள அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்க பரிந்துரை செய்ய வேண்டும்,
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.







