மருத்துவ காப்பீடு திட்ட குறைகளை நீக்கக்கோரி அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் தர்ணா
மருத்துவ காப்பீடு திட்ட குறைகளை நீக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க கோவில்பட்டி கிளை சார்பில் இன்று தர்ணா நடந்தது.
தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த தர்ணாவுக்கு ஓய்வூதியர் சங்க வட்டத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.ர். வட்டப் பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். வட்டச் செயலாளர் சின்னதம்பி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
துணைத் தலைவர் மகேஸ்வரன், சிஐடியு மோகன்தாஸ், அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பிரான்சிஸ் மற்றும் குருநாதன், ஜோதிபாஸ், திரவியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்த்சில் வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-

*70 வயது முடிந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
*சத்துணவு, வருவாய் கிராம உதவியாளர், வனத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஊராட்சி செயலாளர் ஓய்வூதியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதிய ரூ.7,850 வழங்க வேண்டும்.
*மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி அனைத்து ஓய்வூதியர்களுக்கும் முழுமையான சிகிச்சை தொகையை வழங்க வேண்டம்.
*கமுட்டேசன் பிடித்த காலம் 15 ஆண்டுகளை 11 ஆண்டாக குறைக்க வேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன,







