தமிழகவெற்றிக் கழகம் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
தமிழகவெற்றிக் கழகம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம் மெயின் ரோடு காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில கொள்கைப்பரப்பு இணைச் செயலாளர்கள் லயோலோ மணி, முனைவர் சம்பத்குமார், கேத்ரின் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மாவட்ட துணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் பார்த்திபன், சத்யா சுரேஷ், மாவட்ட பொருளாளர் செல்வின் சுந்தர், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் சுமங்கலி ராஜா, மாவட்ட,நகர,ஒன்றிய, பேரூராட்சி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை கோவில்பட்டி நகரச்செயலாளர் செந்தில்குமார் செய்திருந்தார்.







