“தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்புகள்” கருத்தரங்கம்
கோவில்பட்டி கோ வெங்கட சுவாமி நாயுடு கல்லூரி கணினி பயன்பாட்டுத் துறை சார்பாக “தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகள்” என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி இயக்குனர்.மகேஷ் குமார் தலைமை தாங்கினார், IQAC ஒருங்கிணைப்பாளர் திரு.R.வெங்கடேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கணினி பயன்பாட்டுத் துறையின் இளங்கலை இரண்டாமாண்டு மாணவி பூஜா வரவேற்று பேசினார்.. மூன்றாமாண்டு மாணவி ஸ்ரீநிவேதா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.
இக்கருத்தரங்கில் அசென்சர் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், திட்ட இணை மேலாளர், தங்கமாங்கனி, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு “ஐடி துறைகளில் தொழில் பாதை” என்ற தலைப்பில் பேசினார். மேலும் இன்றைய உலகில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வேலைவாய்ப்பு பற்றிய நெறிமுறைகளைப் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் கணினி பயன்பாட்டுத் துறை, கணினி அறிவியல் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த 150 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கணினி பயன்பாட்டுத் துறை மூன்றாமாண்டு மாணவ மாணவிகள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இறுதியாக மாணவி சுபஸ்ரீ நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர், இயக்குநர் ஆகியோர் தலைமையில் கணினி பயன்பாட்டுத் துறைத் தலைவர் காந்திமதி மற்றும் உதவிப் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.







