புதிய சமுதாய நலக்கூடம் திறப்பு
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஒன்றியம் முடுக்கலான்குளம் ஊராட்சியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ 33 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ கலந்துகொண்டு சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தார்.
நிகழச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் வண்டானம் கருப்பசாமி,அன்புராஜ்,ஜெ பேரவை சாமிராஜ், அதிமுக கிளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.







