பொது விநியோக கடையின் புதிய கட்டிடம்; கனிமொழி எம்.பி.திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட கால்வாய் ஊராட்சியில் ரூ.13.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது விநியோகக் கடையின் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில், திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு, ரூ.13.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது விநியோகக் கடையின் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.3,000 ரொக்கப் பரிசு, மற்றும் பொங்கல் தொகுப்பு, இலவச வேட்டி மற்றும் சேலை ஆகியவற்றைப் பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,

சிவகளையில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி
,ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவகளை ஊராட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை, கனிமொழி எம்.பி,., மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். தொடர்ந்து, சிவகளை ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் மிதிவண்டிகளை வழங்கினார்.







