• March 6, 2026

பொங்கல் பண்டிகை: எட்டயபுரம் சந்தையில் 9 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

 பொங்கல் பண்டிகை: எட்டயபுரம் சந்தையில் 9 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

தென் மாவட்டங்களில் கோவில்பட்டி அருகே உள்ள எட்டபுரம் ஆட்டு சந்தை பிரசித்தி பெற்றதாகும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று  கூடும் இந்த சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்,.,

இதே போல் பல்வேறு ஊர்களில் இருந்து இங்கு வரும் வியாபாரிகள் ஆடுகளை ஏலத்தில் எடுத்து செல்வார்கள். வாரந்தோறும் 2கோடி ரூபாய்  அளவுக்கு வியாபாரம் இருக்கும். பண்டிகை நாட்களில் இந்த தொகை உயரும்,

அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் சூழலில் இன்று எட்டயபுரம் சந்தை கூடியது..காலையில் இருந்தே கூட்டம் களை கட்டியது.

பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 8 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைகக்கு  விவசாயிகள் கொண்டு வந்து இருந்தனர். இந்த ஆடுகள் ஏலம் விடப்பட்டன. வியாபாரிகள், ஆடுகளின் தரத்த்தை பார்த்து விலை கேட்டு ஏலம் எடுத்தனர். ஆடுகள் விரைவாக ஏலம் போயின. மொத்தம் இன்று  மட்டும் 9 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆகின,

பண்டிகை காலம் என்பதால் ஆட்டின் விளையும் கிலோவுக்கு ரூ.100 முதல் .ரூ.,200 வரை அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டன, இதனால் பொங்கல் பண்டிகையின் போது ஆட்டு இறைச்சியின் விலை அதிகரிக்கும்.

கோவில்பட்டியில் கடந்த 1 ந் தேதியில் இருந்தே கிலோவுக்கு ரூ.200 வரை உயர்த்தி விற்கிறார்கள். பொங்கல் வரை இந்த விலை உயர்வு இருக்கும் என்று வியாபாரிகள் முன்கூட்டியே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்து விட்டனர்,

எட்டயபுரத்தில்  வருகிற  புதன்கிழமை சிறப்பு சந்தை கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *