சத்துணவு திட்ட சமூகத் தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்
தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட 443 மையங்களிலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்ட 957 மையங்களிலும் சமூகத் தணிக்கை வழி நடத்தும் குழுவினரால் சமூகத் தணிக்கை 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவு திட்ட 330 மையங்களிலும்,புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்ட 164 மையங்களிலும் சமூக தணிக்கை கடந்த 5ம் தேதி தொடங்கி ஜனவரி 9ம் தேதி நிறைவடைந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவு திட்ட 14 மையங்களிலும்,புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்ட 16 மையங்களிலும் சமூகதணிக்கை முடிவடைந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி ஒன்றிய முத்துசாமிபுரத்தில் நடந்த சமூகத் தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் சின்ன திருக்கை தலைமை தாங்கினார்,.
ஊராட்சி ஒன்றிய சத்துணவு திட்ட உதவியாளர் திருமுருகன்,தலைமை ஆசிரியை தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்துணவு அமைப்பாளர் சகாயமேரி அனைவரையும் வரவேற்றார்.

சமூகத் தணிக்கை வட்டார வள பயிற்றுநர் முத்து முருகன் கலந்து கொண்டு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்ட சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக பொதுமக்களுடன் கலந்துரையாடல் செய்தார்.
சமூகதணிக்கை அறிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில் நலமுடன் வாழ 10 கட்டளைகள் தெரிவித்த மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
சமூக தணிக்கை வழி நடத்தும் குழு உறுப்பினர்கள் கலைச்செல்வி, சிவசக்தி, அருணாதேவி,பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள்,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஆசிரியர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.
இதேபோல் சிவலார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் 16 பள்ளிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.







