தூத்துக்குடியில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதியில் கனிமொழி எம்.பி ஆய்வு


தூத்துக்குடியில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக, மாநகராட்சிக்கு உட்பட்ட ரஹ்மத் நகர், ஆதி பராசக்தி நகர், மாவட்ட தொழில் மையம் ஆகியப் பகுதிகளில் தேங்கி இருக்கும் இடத்தை கனிமொழி எம். பி.நேரில் பார்வையிட்டார்.
பின்னர், மோட்டார் பம்புகள் மூலம் வெள்ளநீரை வெளியேற்றும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், அப்பகுதி மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா, அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.







