உரம் கடத்தல் மற்றும் மானிய முறைகேட்டை தடுக்க மத்திய அரசின் புதிய திட்டம்; டிசம்பர் 1ந் தேதி அமல்
மத்திய அரசு மானியத்துடன் வழங்கப்படும் உரங்களின் விநியோகம் மற்றும் கடத்தலைத் தடுக்க, மத்திய அரசு ஒரு புதிய நடைமுறையைக் கட்டாயமாக்க உள்ளது.
வெளிப்படைத்தன்மை மற்றும் கடத்தல் தடுப்புக்கான ஒரு முக்கிய நகர்வு டிசம்பர் 1 முதல்,
Real Time Fertilizer Sales Monitoring System. என்ற அமைப்பின்படி, ஒவ்வொரு சில்லறை விற்பனையும் இனி நேரடியாக மத்திய அரசின் iFMS/e-Urvarak Server-ல் பதிவு செய்யப்படும்.
மானியம் பெறும் ரசாயன உரம் விற்பனை ஏற்கனவே நாடு முழுவதும் PoS (Point of Sale) கருவி மூலம் ஆதார் மற்றும் கைரேகையுடன் இணைக்கப்பட்டு கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
இந்த FSMS-ன் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளாலேயே பல கோடி ரூபாய் முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன.

FSMS முக்கியப் பலன்கள்:
மானிய ரசாயன உரம் உற்பத்தியாகாமலே, அல்லது விவசாயிகளைச் சென்றடையாமலே, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் கூட்டு சேர்ந்து போலி விற்பனைக் கணக்குகள் தயாரித்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மானியத்தைப் பெற்று வந்த மாபெரும் மோசடி தற்போது பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறைப்படுத்தப்படும் புதிய நடைமுறைப்படி சில்லறை விற்பனை நிலையத்தில் உள்ள PoS ஒருவர் தனது ஆதார் எண்ணை இட்டவுடன், அந்த எண்ணின் கீழ் இதற்கு முன் வாங்கப்பட்ட மொத்த உரத்தின் எண்ணிக்கை மற்றும் வாங்கிய இடத்தின் விவரங்கள் விற்பனையாளருக்குத் தெரிய வரும்.

உதாரணமாக, ஒரே ஆதார் எண்ணில் நூற்றுக்கணக்கான உர மூட்டைகள் விற்கப்பட்ட சந்தேகத்திற்குரிய முந்தைய விற்பனைகள் இந்த FSMS மூலம் எளிதாகக் கண்டறியப்பட்டுள்ளன.
இதன் மூலம், மானியத்துடன் வழங்கப்படும் ரசாயன உரம் விவசாய நிலத்திற்கு செல்லாமல், வேறு இடங்களுக்குக் கடத்தப்படுவதை இம்முறை தடுக்கும்.
இந்த புதிய FSMS கண்காணிப்பு அமைப்பின் மூலம், மாநிலங்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள பயிர் அடிப்படையிலான உர தேவைகள் (crop-wise fertilizer requirement )மற்றும் அவரது நிலத்தைப் பற்றிய முழுமையான தகவல்களின் அடிப்படையில் ஆலோசனைகளை வழங்குவர் பாரிசைப் பின்பற்றி, அதிகப்படியான உரம் பயன்பாட்டைத் தவிர்க்க இது வழிவகுக்கும்.
உரக் கடத்தல் மற்றும் மானிய முறைகேட்டைத் தடுப்பதில் இந்த FSMS ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தினாலும், ஒரு கேள்வி எழுகிறது: பொறுப்பற்ற ரசாயன உர உபயோகத்தினால் சீரழிந்த மண் வளம் மீட்கப்படுமா?

முறைகேட்டைத் தடுக்கும் அதே வேளையில், மண் பரிசோதனை பரிந்துரைகளை உர விற்பனையுடன் இணைப்பதன் மூலம் மட்டுமே, விவசாயிகள் தேவைக்கு அதிகமாக உரம் இடுவதைத் தவிர்க்கவும், மண் வளத்தை மீட்டெடுக்கவும் முடியும்.
இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை, மண் வளம் மேலும் சீரழிவதைத் தடுக்க உதவும்.
இம்முயற்சி, மானியப் பணத்தைக் கடத்தலில் இருந்து காப்பதுடன், வருங்காலத்தில் துல்லியமான விவசாயத்தின் (Precision Agriculture) அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கவும், ரசாயன உரம் வாங்காது தவிர்த்திடும் இயற்கை விவசாயிகளையும் ஊக்கிவிக்க வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
தகவல்:கோ. சுரேஷ்குமார், வேளாண்ஆர்வலர்,கோவில்பட்டி.







