எஸ்.ஐ.ஆர்:கோவில்பட்டி தொகுதி பாஜக வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிலரங்கம்

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பான பயிலரங்கம் பாஜக சார்பில் நடைபெற்றது.
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாஜக வாக்குசாவடி நிலை முகவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ராஜா மீரா திருமண மண்டபத்தில் நடந்த பயிலரங்க நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்ட தலைவர் சரவணா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக டி ராஜா கலந்து கொண்டார்.

மற்றும் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் வேல் ராஜா, இணை அமைப்பாளர் போலீஸ் சீனிவாசன் , ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ஜே சுந்தர்ராஜன் மற்றும் மாவட்டம், ஒன்றியம், கிளைக்கழக நிர்வாகிகள் சக்தி கேந்திரம் பொறுப்பாளர்கள். தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.
ஒவ்வொரு பகுதியிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் சரியான முறையில் நடத்தப்படுகிறதா? வீடுகள் தோறும் வருவாய்துறையினர் சென்று வாக்காளர் திருத்த விண்ணப்ப படிவங்கள் கொடுக்கிறார்களா? என்று ஆய்வு செய்யவேண்டும் என்று யோசனை தெரிவிக்கபபட்டது.,







