மாநில ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு கோவில்பட்டி மாணவர் தேர்வு
பள்ளி கல்வித் துறை சார்பில் தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் கோவில்பட்டி காந்திநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவர் லோகேந்திர கார்த்திக் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கு பெற்று வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த வாரம் சென்னையில் நடைபெறும் மாநில போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.

.மாநில போட்டிக்கு செல்லும் மாணவர் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் கரிகாலன் ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்







