தூத்துக்குடி தெப்பக்குளம் அருகே 2 டிரான்ஸ்பார்மர்களை இடமாற்றம் செய்ய இந்து முன்னணி கோரிக்கை

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கே.எஸ்,ராகவேந்திரா மற்றும் நிர்வாகிகள் சிவலிங்கம்,சிபு, மாதவன், கவி சண்முகம்,பாண்டி ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர், அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
தூத்துக்குடி மாநகராட்சி 39 வது வார்டு சுந்தரபாண்டி விநாயகர் கோவில் முன்புறம் தெப்பக்குளம் உள்ளது, இந்த தெப்பகுளத்தை சுற்றி நடைமேடை அமைக்கபப்டுகிறது. மாநகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் இந்த பணி நடைபெறுகிறது.
இந்த பகுதியில் இரண்டு மின்மாற்றிகள் ( டிரான்ஸ்பார்மர் ) அமைந்து உள்ளன. இவை தெப்பகுளம் மற்றும் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது,

கோவிலுக்கு எதிராக இருக்கக்கூடிய டிரான்ஸ்பார்மர் களை வேறு பகுதிக்கு மாற்றி அமைத்தால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகன ங்களை நிறுத்துவதற்கு வசதியாக இருக்கும்.
எனவே இந்த மின்மாற்றிகளை தெப்பக்குளம் கிழக்கு பகுதிக்கு மாற்ற மாநகராட்சி மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை கேட்டுக்கொள்கிறோம்,’
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது,
மனுவை பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, இது பற்றி பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.







