திருச்சி நூலகத்துக்கு காமராஜர் பெயர்; பாண்டியனார் மக்கள் இயக்க தலைவர் வரவேற்பு
பாண்டியனார் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் சீனிராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திருச்சியில் ரூ.290 கோடியில் அமைய உள்ள நூலகத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவரான டபுள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியனாருக்கு தமிழகஅரசு மணி மண்டபம் மற்றும் அவரது திருஉருவ சிலையும் அமைக்க தமிழ்நாடு முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். இதனை வரவேற்கிறோம்.
நாடார் சமுதாய மக்கள் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.








